X
தமிழ் » திரைப்படங்கள் » ராக்கெட்ரி: நம்பி விளைவு
ராக்கெட்ரி: நம்பி விளைவு

ராக்கெட்ரி: நம்பி விளைவு

Biography | Drama | Thriller | 01 Jul 2022 | U/A | 157 Mins
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

ராக்கெட்ரி: நம்பி விளைவு கதை

ராக்கெட்ரி: நம்பி விளைவு - இயக்குனர் ஆனந்த் மஹாதேவன் மற்றும் மாதவன் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில் மாதவன், சிம்ரன், மோகன் ராமன், கார்த்திக் குமார் என தமிழ் மற்றும் இந்திய திரைப்பட முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தினை மாதவனின் 'திரி கலர் பிலிம்ஸ்' மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சர்ஷா ரே ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிஜித் பாலா எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் மாதவன் படத்தின் நாயகன், தயாரிப்பாளர், இயக்குனர் என மூன்று துறைகளில் பணியாற்றியுள்ளார். ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்திற்கு தமிழக தணிக்கை குழு ' யு/எ ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் தமிழ் - தெலுங்கு - மலையாளம் - கன்னட - ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்தியா படமாக 2022 ஜூலை 01ல் திரையரங்குகளில் வெளியாகிறது. ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தின் டீசர் / டிரைலர், பாடல்கள் என அணைத்து வீடியோக்கள் ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படத்தின் கதை பெரிய சம்பளத்துக்கு நாசா இவரை வேலைக்கு அழைக்க தனது குருநாதர் விக்ரம் சாராபாயின் கோரிக்கையை ஏற்று இஸ்ரோவில் வேலை பார்க்கிறார் நம்பி நாராயணன் (மாதவன்). விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அசுர வளர்ச்சியை எட்ட வேண்டிய ஆர்வத்தில் இருக்கும் நேரத்தில் இவரது உழைப்பு அளப்பறியதாக பார்க்கப்படுகிறது.  திடவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், திரவ எரிபொருள் (liquid fuel) கொண்டும் ராக்கெட்டை அதிக தூரம் செலுத்த முடியும் என்று சாதித்துக் காட்டிய விஞ்ஞானி, ஒரு கட்டத்தில் விகாஸ் என்ஜினையும் இந்தியாவுக்காக கண்டுபிடிக்கிறார்.  நாடே அவரை கொண்டாட வேண்டிய நிலையில், அதிரடியாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்படும் அவர் அதிலிருந்து எப்படி சுய போராட்டம் நடத்தி மீண்டார் என்பது தான் ராக்கெட்ரி படத்தின் கதை. ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தின் பிரத்யேக தகவல்கள் 2001-ம் ஆண்டு பார்த்தாலே பரவசம் திரைப்படத்தில் நடித்த சிம்ரன் மற்றும் மாதவன், பின்பு 2002-ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தியில் கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படத்திலும் நடித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ராக்கெட்ரி படத்தின் மூலம் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். நம்பி நாராயணன் ( இஸ்ரோ விஞ்ஞானி ), இவர் வாழ்க்கையில் நடந்துள்ள சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தினை இயக்கியுள்ளார், மாதவன். இப்படம் நாராயணன் பிரன்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டதாரி மாணவராக இருந்த நாட்களையும், அவர் மீது தவறான உளவுச் குற்றச்சாட்டுக்கள் பதிந்தத்தைப் பற்றியதாகும். இத்திரைப்படம் 2017-ற்கு முன் தயாரிப்புக்கு முந்தைய வேலைகள் ஆரம்பமான நிலையில், அக்டோபர் 2018ல் திரைப்படத்தின் டீஸர் வெளியானது. ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ' ரெட் கெய்ன்ட் மூவிஸ் ' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமையை ' அமேசான் பிரைம் வீடியோ ' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Read More

ராக்கெட்ரி: நம்பி விளைவு நடிகர்கள் & படக்குழுவினர்

ராக்கெட்ரி: நம்பி விளைவு அணியின் தகவல்

இயக்குனர் ஆனந்த் மஹாதேவன், ஆர் மாதவன்
ஒளிப்பதிவாளர் சீர்ஷ ரே
தொகுப்பாளர் பிஜித் பாலா
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் ஆர் மாதவன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சகர்களின் விமர்சனம்

தினமலர் - சினிமா
ராக்கெட்ரி, நம்பி விளைவு - உச்சம்
நக்கீரன் சினிமா
ராக்கெட்ரி - மிஷன் சக்சஸ்!
இந்து தமிழ்
தேசத் துரோக குற்றத்தை நம்பி நாராயணன் எப்படி போராடி வென்றார் என்பதை விரிவாக, அழுத்தமாக சொல்லியிருந்தால், இந்த ராக்கெட்டின் வேகம் இன்னும் அதி கரித்திருக்கும்.
பிஹைண்ட் டாக்ஸ் விமர்சனம்
மொத்தத்தில் ராக்கெட்ரி நம்பி விளைவு- வெற்றியை எட்டும்.
Asianet நியூஸ் தமிழ்
மொத்தத்தில் Rocketry மாதவனுக்கு கிடைத்த Victory என்றே சொல்லலாம்.

ராக்கெட்ரி: நம்பி விளைவு ட்ரெய்லர்

Video Thumbnail

ராக்கெட்ரி: நம்பி விளைவு பாடல்கள்

ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ராக்கெட்ரி: நம்பி விளைவு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+