twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓடிடியில் வெளியாகும் மாதவனின் ராக்கெட்ரி...எப்போ தெரியுமா?

    |

    சென்னை : நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி நடித்த "ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'' திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

    இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது. 80 வயதான நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார்.

    தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஜூன் 1ந் தேதி பான் இந்தியத் திரைப்படமாக இப்படம் திரையரங்கில் வெளியானது.

    பழசை மறக்காத தமன்னா..'தி லெஜண்ட்' நாயகன் அருள் சரவணனுக்காக செய்த விஷயம்!பழசை மறக்காத தமன்னா..'தி லெஜண்ட்' நாயகன் அருள் சரவணனுக்காக செய்த விஷயம்!

    ராக்கெட்ரி

    ராக்கெட்ரி

    ராக்கெட்ரி படத்தில் இஸ்ரோ நம்பி நாராயணனான வாழ்ந்து அனைவரையும் ஒரு நொடி மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் மாதவன். நாராயணனின் 29 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பங்களை இப்படம் சொல்வதால், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி, உடல் எடையை அதிகரித்து, பற்கள் அமைப்பு, கண்ணாடி, நடை,உடை என அனைத்தையும் மாற்றி நம்பி நாராயணனாகவே படத்தில் மாதவன் வாழ்த்து இருக்கிறார்.

    வாழ்க்கை வரலாறு

    வாழ்க்கை வரலாறு

    இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில், அவர் படத்திலிருந்து விலகியதை அடுத்து நடிகர் மாதவன் இப்படத்தை இயக்கினார். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டது.

    சம்பளம் வாங்கவில்லை

    சம்பளம் வாங்கவில்லை

    இப்படத்தில் நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்த சூர்யா இப்படத்திற்காக ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்று மாதவன் பெருமையாக கூறியிருந்தார். அதாவது நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் துணிச்சல் மிகுந்த செய்தியாளராக நடித்திருந்தார் சூர்யா. விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கேரக்டரில் கடைசி ஐந்து நிமிடம் மிரட்டிய சூர்யா கதாபாத்திரம் போல இந்த கதாபாத்திரமும் பேசப்பட்டு வருகிறது.

    ஓடிடியில்

    ஓடிடியில்

    ஜூலை 1ந் தேதி வெளியானத்திரைப்படத்தை அனைத்துதரப்பு மக்களும் வெகுவாக புகழ்ந்தனர். இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்தை பார்த்து சிறிது நேரம் வாயடைந்து போய்விட்டதாக பாராட்டி இருந்தார். இந்நிலையில் இத்திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    R Madhavan's biographical drama film, Rocketry: The Nambi Effect to premiere on ott on july 26
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X