Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாராட்டிய ரஜினி..காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மாதவன்.. டிரெண்டாகும் வீடியோ !
சென்னை : ரஜினியை சந்தித்த மாதவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது. 80 வயதான நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார்.
பான் இந்திய திரைப்படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் ஜூன் 1ந் தேதி இத்திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
Rocketry
public
Review
:
யார்
இந்த
நம்பி
நாராயணன்?..
மாதவனுக்கு
குவியும்
பாராட்டு!

நடிகர் மாதவன்
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமில்லாமல் பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான 'அலைபாயுதே' என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Recommended Video

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்
நடிகர் மாதவன், இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். 60 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போது. இதுவரை 15 கோடி ருபாய் மட்டுமே வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் படத்திற்கு எதிர்பார்த்த வசூலை பெற்றுத்தரவில்லை கூறப்படுகிறது.

ரொம்ப நன்றி சார்
இந்த நிலையில், ராக்கெட்ரி திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த மாதவன் ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகர் மாதவனுக்கு ரஜினிகாந்த் சால்வை பாராட்டுகிறார். அதனை தொடர்ந்து ரொம்ப நன்றி சார்... ரொம்ப நன்றி... என்று ரஜினியின் காந்த் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். இவர்களின் சந்திப்பின் போது முன்னாள் இன்ஸ்ரோ விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் உடன் இருந்தார்.
|
பாராட்டிய ரஜினி
மாதவனின் ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் திரைப்படம் பார்த்த ரஜினிகாநத், தனது ட்விட்டர் பக்கத்தில் "ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிகளுக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷண் நம்பி நாராயணன் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்து படமாக்கி இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக மாதவன் தன்னை நிரூபித்திருக்கிறார்.