twitter
    X
    Home சினி தரவரிசை

    இறுதி நேரத்தில் பெயர் மாற்றப்பட்டு வெளியான தமிழ் படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, March 21, 2022, 02:10 PM [IST]

    திரைப்படங்களின் தலைப்பு மற்றும் வெளியிட்டு தேதிகள் சமீப காலமாகவே பல பிரச்சனைகளை சந்தித்து மாற்றப்பட்டு வருகிறது. சில படங்களின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பினை தொடங்கும் படக்குழு சில காரணங்களால் அப்படத்தின் தலைப்பை மாற்றியுள்ளனர். உதாரணத்திற்கு இயக்குனர் எ. எல் . விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த "தியா" என்ற திரைப்படம், "கரு" என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கி இறுதியில் வெளியீட்டிற்கு முன்பாக இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. மேலும் தெய்வத்திருமகள், எந்திரன் என பல திரைப்படங்கள் உள்ளது. இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் வெளியீட்டிற்கு முன்பாக சில பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக படத்தினை தலைப்பை மாற்றி வெளியாகியுள்ள படங்கள் இந்து உள்ளன.

    cover image
    என்னை அறிந்தால்

    என்னை அறிந்தால்

    1

    கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் அதிரடி மற்றும் திரில்லர் படமாக உருவாகி தல அஜித் குமார் ஒரு காவலராக நடித்து புகழ் பெற்றுள்ள திரைப்படம். இப்படம் முதலில் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஒருவர் நிராகரிக்க பின்னர் அஜித் இப்படத்தினை தேர்ந்தேடுத்து நடித்து வெற்றி பெற்றுள்ளார். இப்படத்தின் அறிவிப்புகள் முதலில் "ஆயிரம் தோட்டாக்கள்" என்ற தலைப்பில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட படக்குழு பின்னர் சில காரணங்களால் படக்குழு "என்னை அறிந்தால்" என இப்படத்தின் தலைப்பினை மாற்றியுள்ளது.

    வரலாறு

    வரலாறு

    2

    "காட் ஃபாதர்" என்ற ஆங்கில தலைப்பில் அஜித் மூன்று வேடங்களில் நடித்துள்ள இப்படம், வெளியிட்டு நேரத்தில் ஆங்கில தலைப்புகள் பொருத்தப்பட கூடாது என்று தமிழ் சினிமாவில் எழுந்த பிரச்சனையால் "வரலாறு" என தலைப்பினை மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தினை இயக்கியவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஆவார். இப்படம் பிலிம்பேர், தேசிய விருது என பல  விருதுகளை வென்று குவித்துள்ளது.

    தியா

    தியா

    3

    இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திகில் திரைப்படம். இப்படம் வெளியாவதற்கு முன்பு கரு என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இப்படத்தில் தலைப்பில் திருப்தி கொள்ளாத படக்குழு இப்படத்தினை "தியா" என தலைப்பினை மாற்றி வெளியிட்டுள்ளது.

    புரியாத புதிர்

    புரியாத புதிர்

    4

    மெல்லிசை என்ற தலைப்பில் திரில்லர் மற்றும் காதல் கதையாக உருவாகி உள்ள இப்படம் வெளியீட்டில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. பல ஆண்டுகளாக வெளியிட முடியாமல் தவித்த படக்குழு பின்னர் சிலரின் அறிவுரைப்படி இப்படத்தின் தலைப்பினை "புரியாத புதிர்" என மாற்றி இப்படத்தினை வெளியிட்டுள்ளது.

    காவலன்

    காவலன்

    5

    விஜயின் வேட்டைக்காரன் என்ற படத்தினை தொடர்ந்து காவல் காரன் என மலையாள திரைப்பட ரீமேக் படமாக உருவான இப்படம், வெளியீட்டிற்கு முன்பாகவே பல விமர்சனங்களில் சிக்கியது. வேட்டைக்காரன் பெற்ற தோல்வி விஜயின் திரைவாழ்வில் ஒரு சருக்கலாக மாறியது. இப்படத்தின் தலைப்பும் காவல் காரன் என சில உள்ளதால் ரசிகர்கள் கேலி செய்ய தொடங்கியுள்ளனர். பின்னர் இப்படக்குழு இப்படத்தினை காவல் காதல் என மாற்றியது, அதிலும் திருப்தி கொள்ளாத படக்குழு காவலன் என பெயர் மாற்றி இப்படத்தினை வெளியிட்டுள்ளது.

    விருமாண்டி

    விருமாண்டி

    6

    கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான பிரமாண்ட வெற்றி திரைப்படம் தான் விருமாண்டி. இப்படம் முதலில் சண்டியர் என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டு பிரபலமானது. இளைஞர்கள் மற்றும் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் இப்படம் சில வன்முறைகள் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என பல வழக்குகள் தோன்றியதை தொடர்ந்து இப்படம் விருமாண்டி என தலைப்பினை மாற்றப்பட்டுள்ளது.

    நம்ம வீட்டுப் பிள்ளை

    நம்ம வீட்டுப் பிள்ளை

    7

    2019-ம் ஆண்டு ஒரு நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ள சூப்பர் ஹிட் குடும்பத் திரைப்படம். இப்படத்தின் தலைப்பு முதலில் "எங்க வீட்டுப் பிள்ளை" என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த தலைப்பில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்து புகழ் பெற்ற திரைப்படம் என்பதால் இப்படத்தின் தலைப்பினை உபயோகிக்க விஜயா ப்ரோடுக்ஷன் மறுத்துள்ளது. பின்னர் இப்படத்தினை "நம்ம வீட்டுப் பிள்ளை" என பெயர் மாற்றி வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

    சூப்பர் டீலக்ஸ்

    சூப்பர் டீலக்ஸ்

    8

    2019ஆம் ஆண்டு விமர்சன ரீதியாக தமிழ் திரையில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள திரைப்படம். மிகவும் அழுத்தமான திரைக்கதையில் புகழ் பெற்றுள்ள இப்படம், அநீதி கதைகள் என முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சூப்பர் டீலக்ஸ் என பெயர் மாற்றி வெளியானது.

    அச்சம் என்பது மடமையடா

    அச்சம் என்பது மடமையடா

    9

    இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவான காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே "தள்ளிப்போகாதே" என்ற பாடல் வெளியிட்டு இளைஞர்களின் கவனத்தை பெற்று பிரபலமான திரைப்படம். சில காரணங்களால் வெளியிட முடியாமல் தள்ளிச்சென்ற இப்படம் இறுதியில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம். இப்படம் முதலில் "சட்டென்று மாறுது வானிலை" என்ற தலைப்பில் உருவானது, பின்னர் சில காரணத்தால் "அச்சம் என்பது மடமையடா" என்ற தலைப்பினை மாற்றி வெளியிடப்பட்டது.

    தெய்வத்திருமகள்

    தெய்வத்திருமகள்

    10

    இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த பிரமாண்ட வெற்றி திரைப்படம். இப்படத்தினை தலைப்பு முதலில் தெய்வத்திருமகன் என்ற பெயரிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஒரு சமூகத்தினரின் தலைவர் பெயர்க்கு அளித்த பட்டம் என்பதால் இப்படத்தின் தலைப்பினை மாற்ற பல பிரச்சனைகள் கிளம்பியது, பின்னர் இப்படத்தின் தலைப்பினை தெய்வத்திருமகள் என பெயர் மாற்றி இப்படத்தினை வெளியிட்டனர் படக்குழுவினர். இப்படம் பல விருதுகளை வென்று குவித்துள்ள பிரமாண்ட வெற்றி திரைப்படமாகும்.

    கஜினி

    கஜினி

    11

    மிரட்டல் என்ற தலைப்பில் அஜித் நிராகரித்த இப்படம், பின்னர் சூர்யா நாயகனாக நடித்து தமிழ் திரையில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள திரைப்படம். வெளியிடுவதற்கு முன்புதான் இப்படத்தின் தலைப்பு கஜினி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

    குருதிபுனல்

    குருதிபுனல்

    12

    கமல்ஹாசன், அர்ஜுன் நடித்த பிரமாண்ட வெற்றி திரைப்படம். இப்படம் ஆஸ்கார் விருத்திற்காக பரிந்துரைக்க பட்ட புகழ் பெற்ற தமிழ் திரைப்படமாகும். இப்படத்திற்கு முதலில் துரோகி என பெயரிடப்பட்டுள்ளது, பின்னர் சில காரணாத்தால் "குருதிப்புனல்" என பெயர் மாற்றம் செய்து வெளியானது.

    தேவர் மகன்

    தேவர் மகன்

    13

    ஆஸ்கார் விருத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட பிரமாண்ட வெற்றி திரைப்படம். இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை இப்படத்தினை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. இப்படத்திற்கு முதலில் "நம்மவர்" என பெயரிடப்பட்ட நிலையில் பின்னர் "தேவர் மகன்" என பெயர் மாற்றியுள்ளது.

    காக்கி சட்டை

    காக்கி சட்டை

    14

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம்தான் காக்கி சட்டை. இப்படத்திற்கு முதலில் டாணா என பெயரிடப்பட்ட நிலையில் பின்னர் காக்கி சட்டை என பெயர் மாற்றப்பட்டது. இதற்கான காரணத்தை படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.

    சகலகலா வல்லவன் அப்பாடக்கர்

    சகலகலா வல்லவன் அப்பாடக்கர்

    15

    இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் உருவான நகைச்சுவை திரைப்படம். இப்படம் பல எதிர்பார்ப்பில் வெளியாகி இறுதியில் படு தோல்வி பெற்றது. இப்படத்திற்கு முதலில் அப்பாடக்கர் என பெயரிடப்பட்ட நிலையில் பின்னர் சகலகலா வல்லவன் என தலைப்பினை மாற்றி இப்படம் வெளியானது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X