X
தியா

தியா

Drama | 27 Apr 2018 | U | 140 Mins
Tamil

2.6 /5 Users

4 /5 Filmibeat

தியா கதை

தியா  இயக்குனர் விஜய் இயக்கத்தில் ப்ரேமம் புகழ் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.  பிரேமம் மலர் டீச்சராக புகழ்பெற்றவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் முதல் திரைப்படம் கரு ஆகும்.  கதை: டீன் ஏஜில் நாக சௌரியாவை காதலிக்கும் சாய் பல்லவி எதிர்பாராவிதமாக கர்ப்பமாகிறார். அந்தக் குழந்தை பிறந்தால் இருவரின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என அந்தக் கருவைக் கலைக்க குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். பிறகு 5 வருடங்கள் கழித்து இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. சாய் பல்லவியின் நினைவில் தியாவாக வாழும் அந்தக் கரு தன் உயிரிழப்புக்கு காரணமான ஒவ்வொருவராகப் பழி வாங்குகிறது. கருவைக் கலைக்க ஒப்புக்கொண்ட நாக சௌரியாவையும் பழிவாங்க நினைக்கும் குழந்தையிடம் இருந்து சாய் பல்லவி அவரைக் காப்பாற்றினாரா என்பது மீதிக்கதை.
Read More

தியா நடிகர்கள் & படக்குழுவினர்

தியா அணியின் தகவல்

இயக்குனர் ஏ எல் விஜய்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் சுபாஸ்கரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தியா விமர்சகர்களின் விமர்சனம்

tamil.flimibeat.com
தன் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க குடும்பத்தினர் திட்டமிடும்போது பதைபதைப்பது, தன் கணவன் உயிரைக் காப்பாற்றத் துடிப்பது, முதல்முறை தனது மகள் இருப்பது தெரிந்து இனம்புரியாத உணர்வில் அழுவது, தியா தியா என்று அழைத்து குழந்தை இருப்பதை உணர்ந்து புன்னகைப்பது என தமிழில் முதல் அறிமுகத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சாய் பல்லவி. கொடுத்த கேரக்டரில் திருப்தியாக நடித்திருக்கிறார் நாக சௌரியா. குழந்தை தியாவாக வரும் பேபி வெரோனிகாவின் சலனமில்லாத பார்வையும், க்யூட்னெஸ்ஸும் மனதில் பதிகிறது. நாக சௌரியாவின் அப்பாவாக நிழல்கள் ரவி, சாய் பல்லவியின் அம்மாவாக ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இருவரின் அடுத்தடுத்த கொலை, குடும்பத்தினரை அதிர்ச்சியாக்குகிறது. பிறகு, குடும்ப டாக்டரும் பலியாக, அதில் இருக்கும் சில ஒற்றுமைகளால் இதில் ஏதோ சிக்கல் இருப்பதை உணர்கிறார் சாய் பல்லவி. பிறகுதான் அந்த அமானுஷ்யத்தை தெரிந்துகொள்கிறார் சாய் பல்லவி. பின்னர், தனது மாமாவின் இறப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் அவர், தனது கணவனைக் காப்பாற்ற அவர் துடிக்கும் காட்சிகளில் காதலின் மாயம். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் அலட்டல் திகட்டல் இல்லாத காட்சி அமைப்புகள். சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை, கதைக்கேற்றபடி மிரட்டல் இல்லாத அமைதியான ஓட்டம். பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஹாரர் திரைக்கதையில் வெகு சாஃப்ட்டான ஒரு படத்தை எடுத்திருப்பது நல்ல முயற்சி. அடுத்தடுத்து என்ன நடக்கும் என எளிதாக யூகிக்க முடிகிற விதமாகவும், ஆரம்பத்திலேயே பழிவாங்கலுக்கான காரணம் தெரிவதும் கொஞ்சம் மைனஸ். திரைக்கதையில் இன்னும் சஸ்பென்ஸ் கூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

தியா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

தியா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+