தியா இயக்குனர் விஜய் இயக்கத்தில் ப்ரேமம் புகழ் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
பிரேமம் மலர் டீச்சராக புகழ்பெற்றவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் முதல் திரைப்படம் கரு ஆகும்.
கதை:
டீன் ஏஜில் நாக சௌரியாவை காதலிக்கும் சாய் பல்லவி எதிர்பாராவிதமாக கர்ப்பமாகிறார். அந்தக் குழந்தை பிறந்தால் இருவரின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என அந்தக் கருவைக் கலைக்க குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். பிறகு 5 வருடங்கள் கழித்து இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. சாய் பல்லவியின் நினைவில் தியாவாக வாழும் அந்தக் கரு தன் உயிரிழப்புக்கு காரணமான ஒவ்வொருவராகப் பழி வாங்குகிறது. கருவைக் கலைக்க ஒப்புக்கொண்ட நாக சௌரியாவையும் பழிவாங்க நினைக்கும் குழந்தையிடம் இருந்து சாய் பல்லவி அவரைக் காப்பாற்றினாரா என்பது மீதிக்கதை.