சாஹோ இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ப்ரமோட் உப்பளபடி, தயாரிப்பாளர் வம்சி கிருஷ்ணா ரெட்டி தயாரிக்க, இசையமைப்பாளர் ஷங்கர் இஹ்ஸான் லோய், பட்ஷஹ், குரு ராந்தவா, தனிஷ்க் பாக்ச்சி ஆகியோர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தினை இப்படத்தின் தயாரிப்பாளரான ப்ரமோட் உப்பளபடி, வம்சி கிருஷ்ணா ரெட்டி, பூஷன் குமார் ஆகியோர் இணைந்து யுவி க்ரிஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.
ஒரு வெளிநாட்டு கும்பல் ஒன்று ஒரு நாளுக்கு பல லட்சகோடி தொகையினை பரிமாற்றம் செய்யும் ஒரு பிரபல வங்கியினை கொள்ளையடித்து செல்கிறது. எந்த ஒரு தடையமும் இல்லாமல் பலரை கொன்று கொள்ளையடிக்கின்றனர் கொள்ளையர்கள். இதற்கு அடிப்படையாக பல நாடுகளில் இருந்து ஒரு மாஃபியா கும்பல் இயங்கி வருகிறது என்று அறியும் காவல் துறையினர், அவர்களை கண்டறிந்து அழிப்பதற்கு ஒரு ரகசிய காவலர் அசோக் (பிரபாஸ்)-யை நியமிக்கிறது.
பிரபாஸ் வெளிநாடுகளில் இருக்கும் அந்த மாஃபியா கொள்ளையர்களை ஒவ்வொருவராக கண்டறிந்து கொலைசெய்கிறார். இடையில் ஷ்ரத்தா கபூர் ஒரு சி.பி.ஐ அலுவலராக வருகிறார். இவருடன் சேர்ந்து எதிரிகளை அளிப்பதே இத்திரைப்படத்தின் கதை.
திரையுலகில் மிகவும் சாதாரணமான இந்த கதைக்கருவினை சாதாரணமாக இல்லாமல் ஒரு அழுத்தமான திரைக்கதை அமைத்து இத்திரைப்படத்தில் பிரமாண்ட காட்சிகள் கொண்டு இயக்கி இப்படத்திற்கு வலு சேர்த்துள்ளனர் படக்குழுவினர்.
ப்ரோமோஷன்ஸ்
இப்படத்தின் டீஸரானது 2017 ஏப்ரல் மாதத்தில் பாகுபலி 2ஆம் பாகம் உடன் வெளியானது, பின்னர் இப்படத்தின் ப்ஃரஸ்ட் லுக் போஸ்டர் 2017 அக்டோபர் 23ம் தேதியில் பிரபாஸ்-ன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தினை அணைத்து மொழிகளிலும் ப்ரோமோஷன்ஸ் பணிகளை தீவிரமாக செய்து படத்தினை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.