சாமி 2 கதை

  சாமி 2 (சாமி ஸ்கொயர்) இயக்குனர் ஹரி இயக்கத்தில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா மற்றும் நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

  கதை :

  முதல் பாகத்தில் இருந்தே படம் ஆரம்பமாகிறது. பாஸ்ட் பார்வர்ட் செய்தது போல், டைட்டில் கார்டிலேயே முன்கதைச் சுருக்கம் முடிந்து இரண்டாம் பாகம் தொடங்குகிறது. விவரமாக இந்த முன்கதைச் சுருக்கத்திலேயே திரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை ரீப்ளேஸ் செய்திருக்கிறார் இயக்குநர்.

  பெருமாள்பிச்சையை முடித்துக்கட்டியக் கையோடு, திண்டுகல்லுக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறார் ஆறுச்சாமி. அங்கு மனைவியோடு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க, பெருமாள்பிச்சையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மூன்று மகன்கள் தெய்வேந்திர பிச்சை ( ஜான் விஜய் ), மகேந்திர பிச்சை ( ஓ.ஏ.கே.சுந்தர் ) மற்றும் ராவணப்பிச்சை ( பாபி சிம்ஹா ) அப்பாவை தேடி இலங்கையில் நெல்லை வருகிறார்கள்.

  ராவணப்பிச்சையால் திருநெல்வேலியில் மீண்டும் ரவுடியிசம் தலைத்தூக்க, மீண்டும் நெல்லைக்கு குடும்பத்தோடு பறக்கிறார் ஆறுச்சாமி. ஓகே இது தான் கதை, இனி ஆறுச்சாமிக்கும், பெருமாள்பிச்சையின் மகன்களுக்கும் நடக்கும் மோதல்கள் தான் மீதிக்கதை என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள். இங்கே நாம் கூறியதும் ஒரு முன்கதைச் சுருக்கம் தான்.
  **Note:Hey! Would you like to share the story of the movie சாமி 2 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).
  • The second trailer of Hari directorial Vikram's Saamy 2 is released
  • Saamy 2 official Trailer
  Go to : Saamy 2 Videos