சபாஷ் நாயுடு இயக்குனர் டிகே ராஜீவ் குமார் இயக்கத்தில், கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரமானந்தம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும், நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வருகின்றது. இப்படத்திற்கு இசையமைக்கின்றார் இசையாஞனி இளையராஜா.
கமல் ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படம். இவர்கள் இருவரும் ஹேராம் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும், கமல் ஹாசன் மற்றும் இளையராஜா இவர்களின் கூட்டணியும், பல வருடங்கள் கழித்து இணைந்துள்ளது.
இத்திரைப்படத்தில், கமல் ஹாசன் தசாவதாரம் திரைப்படத்தின் ஒரு கதாப்பாத்திரமான பல்ராம் நாயுடுவின் தோற்றத்தில் தான் படம் முழுக்க வருகிறார். மேலும், இப்படத்தின் தொடக்கவிழா நடிகர் சங்க வளாகத்தில் நடைப்பெற்றது.