twitter

    சபாபதி கதை

    சபாபதி இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.



    சபாபதி திரைப்படத்தின் கதை

    தமிழ் வாத்தி எம்.எஸ்.பாஸ்கரின் மகன் சபாபதி (சந்தானம்) பிறவிலையே திக்கி பேசும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிறுவயதில் இருந்து பல அவமானங்களையும் கிண்டல்களை சந்தித்து வளர்கிறார். இந்த காரணத்தால் இவருக்கு வேலைகள் நிராகரிக்கப்படுகிறது. சந்தானத்திற்கு அவரது எதிர்வீட்டில் உள்ள சாவித்ரி (ப்ரீத்தி வர்மா) என்பவர் மீது காதல். 

    நாயகனின் திக்கி பேசும் குறையால் பல இடங்களில் வேலைகள் மறுக்கப்படுகின்றன. இதனால் விரக்தியடைந்த சந்தானம் குடித்திவிட்டு ரகளை செய்கிறார். அச்சமயம் விதி சந்தானத்தின் வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்து விளையாடுகிறது. 

    தேர்தல் நேரத்தில் மக்களுக்கு விநியோகப்பட இருந்த கோடிக்கணக்கான பணம் கொண்ட பெட்டி ஒன்று சந்தானத்திடம் கிடைக்கிறது. அந்த பெட்டியைத் தொலைத்த அரசியல்வாதியின் ஆட்கள் பெட்டியை தேடுகிறார்கள். அந்த பணத்தை சபாபதி என்ன செய்தார்? வில்லனின் ஆட்கள் அவரை பிடித்தார்களா? என்பதே ‘சபாபதி’ படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie சபாபதி with us? Please send it to us ([email protected]).