சலீம் 2014-ம் ஆண்டு வெளிவந்த அதிரடி திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் என்.வி.நிர்மல் குமார். இப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அக்ஷா பர்டசனி நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை தயாரித்துள்ளது ஸ்டுடியோ 9 நிறுவனம்.
கதை
நான் படத்தின் தொடர்ச்சியாக ஆரம்பிக்கிறது கதை. யாருமற்ற சலீம், மருத்துவம் முடித்து நேர்மையான டாக்டராக ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். நேர்மை, சேவை மனப்பான்மை, எல்லாவற்றிலும் நியாயம் பார்க்கும் மனசு, சமூகத்தின் மேல் உண்மையான அக்கறை என செல்லும் சலீமின் போக்கு, அந்த தனியார் மருத்துவமனைக்குப் பிடிக்காமல் போகிறது.
இதற்கிடையில், சலீமுக்கு அக்ஷாவுடன் திருமணம் நிச்சயமாகிறது. இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். சலீமின் குணத்துக்கு நெரெதிர் குணம் கொண்டவராக அக்ஷா. எனவே திருமணம் வேண்டாம் எனக் கூறிவிடுகிறார்.
ஒரு நாள் சலீமை விருந்துக்கு அழைக்கும் மருத்துவமனை நிர்வாகம், தங்களின் கொள்ளைக்கு உடந்தையாக இல்லாத சலீமை, வேஸ்ட் என்று கூறி டிஸ்மிஸ் செய்வதாக அறிவிக்கிறது. அத்துடன் அந்த விருந்துக்கான பில்லைக் கூட சலீம்தான் கட்ட வேண்டும் என அடாவடி பண்ண.. வெகுண்டு எழுகிறார் சாது சலீம்.
பின் சாதுவாக இருந்த சலீம் ஆச்சன்-இல் ஈடுபடுகிறார். இதனால் சலீம் சந்திக்கும் இன்னல்கள் என்னென்ன என்பதே உச்சகட்டம்.