சங்கத்தமிழன் கதை

  சங்கத்தமிழன் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில்  விஜய் சேதுபதி, ராசி கன்னா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜயா ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் மற்றும் மேர்வின் இசையமைத்துள்ளனர்.

  அரசியல் மற்றும் அதிரடி படமாக உருவாகும் சங்க தமிழன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டிங் பணிசெய்துள்ளார்.


  சங்கத்தமிழன் திரைப்படத்தின் பிரத்தியேக தகவல்கள்

  இத்திரைப்படத்தின் இயக்குனரான விஜய் சந்தர் வாலு, ஸ்கெட்ச் திரைப்படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் மற்றும் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி மாதம் வெளிவந்துள்ளது.
  தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் 2019-ம் ஆண்டு மார்ச் 28-ல் இத்திரைப்படத்தின் தலைப்பு சங்கத்தமிழன் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  சங்கத்தமிழன் திரைப்படத்தில் வெண்ணிலா கபடி குழு, சுந்தர பாண்டியன் திரைப்படத்தினை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரி விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2019 ஆகஸ்ட் 1-ல் முழுவதுமாக முடிவடைந்து படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது.

  ரிலீஸ்

  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2019 ஜூலை இறுதியில் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் எடிட்டிங் பணிகள் முடிவுபெற்று இப்படத்தினை 2019 அக்டோபர் மாதம் தொடக்கத்தில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. ஆனால் திரைப்படம் வெளியிடும் இறுதி நேரத்தில் எழுந்த தயாரிப்பாளர் பிரச்சனையால் இப்படம் அக்டோபர் மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகை அன்று படத்தினை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  சங்க தமிழன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் 2014-ம் ஆண்டு "தல" அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தினை விநியோகம் செய்துள்ள நிறுனத்திற்கும் விஜயா ப்ரோடுக்ஷன் நிறுவனத்திற்கும் உள்ள நிதிப்பிரச்சனை காரணமாக சங்க தமிழன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது.

  இதனை தொடர்ந்து இப்படத்தினை விநியோகம் செய்யும் லிப்ரா ப்ரோடுச்டின் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கு போதிய திரையரங்குகள் இல்லாததால் இப்படத்தினை நவம்பர் 15ல் வெளியிட முடுவெடுத்துள்ளனர்.
  **Note:Hey! Would you like to share the story of the movie சங்கத்தமிழன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).