சத்ரு இயக்குனர் நவீன் நெஞ்சுடன் இயக்கத்தில் கதிர், சிருஷ்டி டாங்கே நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ரகு குமார் @ திரு தயாரிக்க இசையமைப்பாளர் அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.
கதை
கதிர் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், உயர் அதிகாரிகளுக்கு கூட கட்டுப்படாத உதவி ஆய்வாளர் ஆவார். இதனால் வேலைக்கு சேர்ந்த இரண்டு வருடங்களில் இரண்டு முறை சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார். இந்நிலையில் லகுபரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து குழந்தைகளை கடத்தி அவர்களது பெற்றோர்களிடம் பணம் பறிக்கிறார்கள்.
அப்படி ஒரு குழந்தையை கடத்துகிறார்கள். அப்போது கதிர் குறிக்கிட்டு, லகுபரண் டீமில் இருக்கும் ஒருவரை கொள்கிறார். இதனால் வெறியாகும் லகுபரண் மற்றும் டீம் கதிரையும், அவரது குடும்பத்தையும் பழிவாங்க துடிக்கிறார்கள். இந்த திருடன் போலீஸ் விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் மீதிக் கதை.