சதுரங்க வேட்டை 2014-ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை கலந்த அதிரடித் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் எச். வினோத், கதாநாயகன் நடராஜன் சுப்ரமணியம், கதாநாயகியாக இஷாரா நாயர் நடித்துள்ளனர். மனோபாலா இப்படத்தை தயாரிக்க, சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கதை
இயக்குனர் வினோத் இப்படத்தை ஆறு பிரிவுகளாக பிரித்து காந்தி பாபு (நடராஜன் சுப்பிரமணியம்) தன் தந்திரத்தையும் அறிவையும் பயன்படுத்தி பல்வேறு மக்களை பல்வேறு விதமாக ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் காந்தி பாபு தன்னிடமிருந்த அனைத்தையும் இழக்கிறார். பின்பு அவர் இழந்ததை திரும்ப பெற்றாரா? அல்லது திருந்தி வாழ்ந்தாரா? என்பது மீதிக் கதை.