X
சேதுபதி
Action | 19 Feb 2016 | U |
Tamil

சேதுபதி கதை

சேதுபதி இயக்குனர் அருண் குமார் இயக்கிய அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் நா முத்துகுமார் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

கதை : 

கதையின் ஆரம்பத்தில் ஒரு கும்பல் ஒரு போலீஸ் அதிகாரியை எரித்து கொன்றுவிடுகின்றனர். அந்த கொலை வழக்கு கதாநாயகன் விஜய் சேதுபதியிடம் வருகின்றது. போலீஸ் அதிகாரியை கொன்றவர் எவராயினும், தண்டிக்கப்படுவர் என்று வழக்கை தீவிரமாக விசாரிக்கின்றார்.

அதன் விளைவாக அக்கொலையினை செய்தது அந்த ஊரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் வாத்தியார் என தெரியவர, அவரை கைது செய்கிறார் விஜய் சேதுபதி. ஊரே அஞ்சும் வாத்தியாரை கைது செய்ததால், விஜய் சேதுபதியை பழிவாங்க துடிக்கும் வாத்தியார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு வரும் சிறுவர்களை விஜய் சேதுபதி துப்பாக்கி காட்டி மிரட்டும் போது, வாத்தியாரின் கையாள், அதுப்பாக்கியை ரீலோட் செய்து வைக்கிறார்.

அதனை தெரியாமல் ஒரு சிறுவனை நோக்கி சுடும் பொழுது அக்குண்டு அச்சிறுவனின் கழுத்தில் பட்டு இறக்க, விஜய் சேதுபதியை தற்காலிக வேலை நிறுத்தம் செய்கிறது நிர்வாகம். அதன் பின், வாத்தியாரின் அராஜகம் தலைவிரித்தாட, அதனை விஜய் சேதுபதி எவ்வாறு சமாளித்தார்? அதன் பிறகு என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+