X
சேதுபதி

சேதுபதி

Action | 19 Feb 2016 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

சேதுபதி கதை

சேதுபதி இயக்குனர் அருண் குமார் இயக்கிய அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் நா முத்துகுமார் பாடல் வரிகள் எழுதியுள்ளார். கதை :   கதையின் ஆரம்பத்தில் ஒரு கும்பல் ஒரு போலீஸ் அதிகாரியை எரித்து கொன்றுவிடுகின்றனர். அந்த கொலை வழக்கு கதாநாயகன் விஜய் சேதுபதியிடம் வருகின்றது. போலீஸ் அதிகாரியை கொன்றவர் எவராயினும், தண்டிக்கப்படுவர் என்று வழக்கை தீவிரமாக விசாரிக்கின்றார். அதன் விளைவாக அக்கொலையினை செய்தது அந்த ஊரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் வாத்தியார் என தெரியவர, அவரை கைது செய்கிறார் விஜய் சேதுபதி. ஊரே அஞ்சும் வாத்தியாரை கைது செய்ததால், விஜய் சேதுபதியை பழிவாங்க துடிக்கும் வாத்தியார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு வரும் சிறுவர்களை விஜய் சேதுபதி துப்பாக்கி காட்டி மிரட்டும் போது, வாத்தியாரின் கையாள், அதுப்பாக்கியை ரீலோட் செய்து வைக்கிறார். அதனை தெரியாமல் ஒரு சிறுவனை நோக்கி சுடும் பொழுது அக்குண்டு அச்சிறுவனின் கழுத்தில் பட்டு இறக்க, விஜய் சேதுபதியை தற்காலிக வேலை நிறுத்தம் செய்கிறது நிர்வாகம். அதன் பின், வாத்தியாரின் அராஜகம் தலைவிரித்தாட, அதனை விஜய் சேதுபதி எவ்வாறு சமாளித்தார்? அதன் பிறகு என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
Read More

சேதுபதி நடிகர்கள் & படக்குழுவினர்

சேதுபதி அணியின் தகவல்

இயக்குனர் அருண் குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சேதுபதி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
பக்கத்து வீட்டு இளைஞன் போல பாந்தமாக வந்து போய்க் கொண்டிருந்த விஜய் சேதுபதி, மெல்ல ரவுடியாக மாற முயற்சித்து, இப்போது அதிரடி போலீசாக அவதாரமெடுத்துள்ளார் சேதுபதியில். சரி, எதிர்ப்பார்த்த வழக்கமான போலீஸ் கதைதானே.. இதில் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? இருக்கிறது.... அது, விஜய் சேதுபதி.. விஜய் சேதுபதி மட்டும்தான்! வேல ராமமூர்த்திக்கு இதில் பிரதான வில்லன் வேடம். அந்த உருவத்துக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆனால் பொசுக்கென்று அமைந்துவிட்டது அவருக்கான க்ளைமாக்ஸ். பண்ணையாரும் பத்மினியும் என்ற மகா சாதுவான படத்தைத் தந்த அருண் குமார், தனது அடுத்த படத்திலேயே ஆக்ஷனுக்குத் தாவியிருக்கிறார், பழக்கப்பட்ட திரைக்கதையுடன். இந்த போலீஸ் கதை விஜய் சேதுபதிக்கு வேண்டுமானால் புதுசாக இருக்கலாம். ஆனால் மாதத்துக்கு நான்கு 'போலீஸ் சினிமா' பார்க்கும் தமிழ் சினிமா ரசிகனுக்கு?

சேதுபதி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சேதுபதி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+