»   »  பின்தங்கிய மிருதன், சேதுபதி... தொடர்ந்து முன்னணியில் கணிதன்

பின்தங்கிய மிருதன், சேதுபதி... தொடர்ந்து முன்னணியில் கணிதன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதர்வாவின் நடிப்பில் வெளியான கணிதன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மிருதன், சேதுபதி பின் தங்கியுள்ளன. கணிதன் இதுவரை மொத்தமாக ரூ. 3 கோடி வரை வசூலித்துள்ளது.

மிருதன் 2.30 கோடியையும், சேதுபதி 1.62 கோடியையும் வசூலித்துள்ளன. இதன் மூலம் இந்த மூன்று படங்களில் கணிதன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


அருள்நிதியின் ஆறாது சினம் இன்னும் பிக்கப் ஆகவில்லை. விரைவில் அதுவும் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


கணிதன்

கணிதன்

அதர்வா, கேத்தரின் தெரசா நடிப்பில் கடந்த வாரம் வெளியான கணிதன் முதல் வார முடிவில் சுமார் 51.09 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் மூலம் சென்னை பாக்ஸ் ஆபீஸில் நம்பர் இடத்தைப் பெற்றிருக்கிறது கலைப்புலி தாணுவின் கணிதன்.


3 கோடிகள்

3 கோடிகள்

மேலும் 175 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் வார இறுதியில் மொத்தமாக 3 கோடிகள் வரை வசூலித்து சாதனை செய்துள்ளது. மிகப்பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் வெளியான இப்படம் 3 கோடிகள் வசூலித்திருப்பதை, பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். கணிதன் வெற்றி பெற்றதன் மூலம் ஈட்டி வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் அதர்வா.


மிருதன்

மிருதன்

ஜெயம் ரவி, லட்சுமி மேனனின் மிருதன் 2 வது வாரத்தில் 41.89 லட்சங்களை வசூல் செய்து 2 வது இடத்தைப் பிடித்துள்ளது. வெளியாகி 2 வாரங்கள் தாண்டிய நிலையில் இப்படம் 2.30 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


சேதுபதி

சேதுபதி

போலீசாக மாறி விஜய் சேதுபதி என்கவுண்டர் செய்த சேதுபதி, 2 வார முடிவில் 36.50 லட்சங்களை வசூலித்திருக்கிறது. 2 வாரங்கள் முடிவில் இதுவரை 1.62 கோடிகளை சேதுபதி வசூல் செய்துள்ளது.


ஆறாது சினம்

ஆறாது சினம்

அருள்நிதி கோபம் கொண்டு நடித்த ஆறாது சினம் முதல் வார முடிவில் 34.06 லட்சங்களை வசூலித்துள்ளது. படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருப்பதால் வரும் வாரங்களில் இப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Box Office: Atharvaa's Kanithan Beats Jeyam Ravi's Miruthan and Viijay Sethupathi's Sethupathi in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil