ஷகிலா இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் பிரபல தென்னிந்திய நடிகை 'ஷகிலா' வாழ்க்கை வரலாற்றை கதைக்கருவாக கொண்டு உருவாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகை ரிச்சா சட்டா நடித்துள்ளார்.
பங்கஜ் திரிபாத்தி, விக்கி கடியன், ராஜவ் பிள்ளை என பல முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஹிந்தி திரைப்படமாக உருவான ஷகிலா திரைப்படம், பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.