சிவலிங்கா இயக்குனர் பி வாசுவின் இயக்கத்தில், உருவாகும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தில், ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் மற்றும் ஷக்தி வாசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் கன்னட மொழியில், வெளிவந்த சிவலிங்கா திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும்.
இத்திரைப்படத்தினை 2017-ம் ஆண்டு வரும் பொங்கல் நாளன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 2005-ம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து மீண்டும், பி வாசு மற்றும் வடிவேலு கூட்டணியில் படம் உருவாகின்றது.