சிகை இயக்குனர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் நடிகர் கதிர், மீரா நாயர், ரித்விகா, ராஜ் பாரத், மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ள குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் விக்னேஷ் லோகு தயாரிக்க இசையமைப்பாளர் ரோன் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.
கதை
ராஜ்பரத் சென்னையில் வறுமை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை, வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் தொழில் செய்பவர். புரோக்கர் வேலையை வேறு வழி இன்றி செய்யும் இவரின் வாழ்க்கையை, இவர் செய்யும் தொழிலே மாற்றுகிறது.
புதிதாக வரும் வாடிக்கையாளர் சந்தோஷ்க்கு நிம்மி(மீரா நாயர்)யை அனுப்புகிறார். பின்பு எந்த தகவல்களும் இல்லாததால் வாடிக்கையாளரின் வீட்டிற்கு செல்கிறார் ராஜ்பரத், அங்கே தனது வாடிக்கையாளர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகிறார்.
நிம்மியை தேடி அலையும் ராஜ்பரத், இறுதியில் அதே வீட்டில் நிம்மி பிணமாக இருப்பதை கண்டறிகிறார், பின்பு அங்கிருந்து கதிர் அழுதுக்கொண்டு செல்வதை பார்க்கிறார். கதிரை பின்தொடர்ந்து ராஜ்பரத் செல்கிறார், கடைசியில் கதிருக்கும், இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்? கதிர் யார்? அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.