சிலுக்குவார் பட்டி சிங்கம் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் தானே நடித்து தயாரித்துள்ள நகைச்சுவை திரைப்படம். மேலும் ஓவியா, ரெஜினா கேஸ்சன்றா, யோகி பாபு, கருணாகரன், ஆனந்த் ராஜ், மன்சூர் அலி கான், சௌந்தர்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கதை
சத்யமூர்த்தி என்ற போலிஸ் கான்ஸ்டேபிள்( விஷ்ணு விஷால் ) பயந்த சுபாவம் கொண்டவர். தனது வேலைதான் முக்கியம் என்று இருப்பவர், யாரு வம்புக்கும் செல்லாத கதாப்பத்திரம். இப்படி இருக்கும் பட்சத்தில், காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய ரவுடியான சைகிள் சங்கர் ( சாய் ரவி ) சிலுக்குவார்பட்டிக்கு வருகிறார். அவர் வருவதே முன்னாள் அமைச்சரான மன்சூர் அலிகானை கொலை செய்யத்தான்.
சங்கரை பற்று ஒன்றும் தெரியாமல் எதிர்பாரத விதமாக ரவுடியை கைது செய்கிறார் சத்யமூர்த்தி. எப்படியோ சைகிள் சங்கர் சிறையில் இருந்து தப்பித்து விடுகிறார். பின்பு அவர் போலீஸ் கான்ஸ்டேபிளை கொன்ற பிறகே ஊர் திரும்புவதாக உறுதியேற்கிறார்.
வில்லன் சத்யமூர்த்தியை பழி வாங்கினாரா, இல்லை நாயகன் வில்லனை கைது செய்தாரா என்பதை தூக்கலான காமெடியோடு சொல்லி இருப்பது தான் மீதிக்கதை.