X
தமிழ் » திரைப்படங்கள் » சிலுக்குவார்பட்டி சிங்கம்
சிலுக்குவார்பட்டி சிங்கம்

சிலுக்குவார்பட்டி சிங்கம்

Comedy | 21 Dec 2018 | U |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

சிலுக்குவார்பட்டி சிங்கம் கதை

சிலுக்குவார் பட்டி சிங்கம்  இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் தானே நடித்து தயாரித்துள்ள நகைச்சுவை திரைப்படம். மேலும் ஓவியா, ரெஜினா கேஸ்சன்றா, யோகி பாபு, கருணாகரன், ஆனந்த் ராஜ், மன்சூர் அலி கான், சௌந்தர்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்  லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதை சத்யமூர்த்தி என்ற போலிஸ் கான்ஸ்டேபிள்( விஷ்ணு விஷால் ) பயந்த சுபாவம் கொண்டவர். தனது வேலைதான் முக்கியம் என்று இருப்பவர், யாரு வம்புக்கும் செல்லாத கதாப்பத்திரம். இப்படி இருக்கும் பட்சத்தில், காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய ரவுடியான சைகிள் சங்கர் ( சாய் ரவி ) சிலுக்குவார்பட்டிக்கு வருகிறார். அவர் வருவதே முன்னாள் அமைச்சரான மன்சூர் அலிகானை கொலை செய்யத்தான். சங்கரை பற்று ஒன்றும் தெரியாமல் எதிர்பாரத விதமாக ரவுடியை கைது செய்கிறார் சத்யமூர்த்தி. எப்படியோ சைகிள் சங்கர் சிறையில் இருந்து தப்பித்து விடுகிறார். பின்பு அவர் போலீஸ் கான்ஸ்டேபிளை கொன்ற பிறகே ஊர் திரும்புவதாக உறுதியேற்கிறார். வில்லன் சத்யமூர்த்தியை பழி வாங்கினாரா, இல்லை நாயகன் வில்லனை கைது செய்தாரா என்பதை தூக்கலான காமெடியோடு சொல்லி இருப்பது தான் மீதிக்கதை.
Read More

சிலுக்குவார்பட்டி சிங்கம் நடிகர்கள் & படக்குழுவினர்

சிலுக்குவார்பட்டி சிங்கம் அணியின் தகவல்

இயக்குனர் செல்லா அய்யாவு
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை லியோன் ஜேம்ஸ்
தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
போலீசாக விஷ்ணு விஷால். கம்பீரமாக போலீஸ் உடையில் தோன்றினாலும், தனது சின்னச்சின்ன நடவடிக்கைகளாலும் கிச்சுகிச்சு மூட்டுகிறார். பின்பாதியில் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு கெட்டப்பில் வந்து வெரைட்டி காட்டி இருக்கிறார். அதிலும் அந்த ஆட்டக்காரி கெட்டப் ஆஸம். விஷ்ணு படத்துக்கே உரித்தான குடும்பத்தோடு பார்க்கும் கேரண்டியோடு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது ஓவியாவின் கதாபாத்திரம்தான். ஆட்டக்காரி கனகாவாக சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நடிப்பில் ரிலீசாகும் முதல் படம் என்பதால் ஓவியா ஆர்மியினர் இந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். மொத்தத்தில், முகம் சுளிக்க வைக்கும் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை என்பதால் சிலுக்குவார்பட்டி சிங்கத்தை பயமின்றி, குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்.

சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சிலுக்குவார்பட்டி சிங்கம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+