X
சிந்துபாத்
Action | Drama | 27 Jun 2019 | U/A | 133 Mins
Tamil

சிந்துபாத் கதை

சிந்துபாத் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அதிரடி திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராஜாராஜன் மற்றும் ஷான் சுதர்ஷன் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கதை

ஊரே கண்டு வியக்கும் அளவிற்கு திருட்டு வேலைகளை செய்து வருகிறார், விஜய் சேதுபதி. அவருடன் சூர்யா என்ற சிறுவன் வாழ்ந்து வருகிறான். தனது காதில் ஒரு பிரச்சனைகளுடன் ஜாலியாக தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், விஜய் சேதுபதி. இவர் அதே ஊரில் ஒரு நடுத்தெரு குடும்பத்தை சேர்ந்த அஞ்சலியை பார்த்தவுடன் ஒரு தலையாக காதலித்து வருகிறார்.

ஊரே வியக்கும் அளவிற்கு அடாவடி செய்யும் அஞ்சலியை ஒரு வழியாக காதலிக்க வைக்கிறார், விஜய் சேதுபதி. காதலால் இவரின் திருட்டு தொழில்களில் இருந்து வெளிவரும் விஜய் சேதுபதி, வேலைக்காக தாய்லாந்து செல்கிறார். 


தாய்லாந்தில் நடக்கும் ஒரு பெரும் சமூக விரோத செயல்களில் சிக்குகிறார் அஞ்சலி. இச்செய்தியினை கேட்டு அதிர்ச்சியடையும் விஜய் சேதுபதி, அஞ்சலி இருக்கும் இடத்தை தேடி செல்கிறார். அஞ்சலியை காப்பாற்ற செல்லும் விஜய் சேதுபதி தனக்கே தெரியாமல் வேறு ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார். இவரின் பிரச்சனையிலிருந்து இவர் மீண்டு அஞ்சலியை காப்பாற்றினாரா? என்ன பிரச்சனை அது? இறுதியில் என்ன ஆயிற்று? என்பதே படத்தின் கதை.

படத்தின் பற்றிய தகவல்கள் 

இப்படத்தின் மூலம் இயக்குனர் அருண் குமார் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கின்றனர். மேலும் இத்திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 16-ம் தேதியும், செகண்ட் லுக் போஸ்டர் மார்ச் 7-ம் தேதியிலும் வெளியிட்டுள்ளனர் படக்குழு. இத்திரைப்படம் வெளிநாடுகளில் இயக்க இருக்கும் என இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இத்திரைப்படத்தின் படக்குழு அறிவித்த இரண்டு வெளியிட்டு தேதிகளில் இப்படத்தினை வெளியிட முடியாமல், இத்திரைப்படத்தின் ட்ரைலர் 2019 ஜூன் 16ல் வெளியாகியதில் இப்படமானது 2019 ஜூன் 27-ல் வெளியாகியுள்ளது.


ரிலீஸ் 

சமீபத்தில் மே மாதம் திரைக்கு வந்த தமிழ் திரைப்படங்களான அயோக்கிய, 100, கீ ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பாளர் பிரச்சனைகள் காரணமாக கூறிய தேதி மற்றும் நேரங்களில் வெளியிட முடியாமல் இருந்தது. தற்போது இந்த வரிசையில் 2 ஆண்டுகளாக இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்துடன் விஜய் சேதுபதியின் சிந்துபாத் திரைப்படமும் சேர்ந்துள்ளது.

தென்னிந்தியாவில் 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி 2. தெலுங்கு திரைப்படமான இத்திரைப்படத்தினை தமிழில் விநியோகம் செய்துள்ள கே புரொடக்‌ஷன் நிறுவனம், தற்போது சிந்துபாத், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது.

இந்நிறுவனம் பாகுபலி தயாரிப்பாளருக்கு தரவேண்டிய 17 கோடி ரூபாயை இன்னும் நிலுவையில் வைத்திருப்பதாகவும், அதனால் தங்களுக்கு தரவேண்டிய 17 கோடியை செலுத்திய பின்னரே கே புரொடக்‌ஷன் நிறுவனத்தின் திரைப்படங்களை வெளியிட வேண்டும் என பாகுபலி 2 தயாரிப்பு நிறுவனம் ஐதரபாத்  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனால் கே புரொடக்‌ஷன் நிறுவனத்தின் சிந்துபாத், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களை வெளியிட ஐதரபாத்  உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆகையால் 2019 மே மாதம் 16-ஆம் தேதியில் வெளிவரவிருந்த சிந்துபாத் திரைப்படம், வெளிவராமல் இருந்தது. தற்போது 2019 ஜூன் மாதம் 27ல் இப்படமானது வெளியாகும் என படக்குழுவினரால் தரப்பட்ட அதிகாரப்பூர்வமான அறிக்கையினை தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடந்து வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+