X
தமிழ் » திரைப்படங்கள் » சிந்துபாத்
சிந்துபாத்

சிந்துபாத்

Action | Drama | 27 Jun 2019 | U/A | 133 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

சிந்துபாத் கதை

சிந்துபாத் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அதிரடி திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராஜாராஜன் மற்றும் ஷான் சுதர்ஷன் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதை ஊரே கண்டு வியக்கும் அளவிற்கு திருட்டு வேலைகளை செய்து வருகிறார், விஜய் சேதுபதி. அவருடன் சூர்யா என்ற சிறுவன் வாழ்ந்து வருகிறான். தனது காதில் ஒரு பிரச்சனைகளுடன் ஜாலியாக தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், விஜய் சேதுபதி. இவர் அதே ஊரில் ஒரு நடுத்தெரு குடும்பத்தை சேர்ந்த அஞ்சலியை பார்த்தவுடன் ஒரு தலையாக காதலித்து வருகிறார். ஊரே வியக்கும் அளவிற்கு அடாவடி செய்யும் அஞ்சலியை ஒரு வழியாக காதலிக்க வைக்கிறார், விஜய் சேதுபதி. காதலால் இவரின் திருட்டு தொழில்களில் இருந்து வெளிவரும் விஜய் சேதுபதி, வேலைக்காக தாய்லாந்து செல்கிறார்.  தாய்லாந்தில் நடக்கும் ஒரு பெரும் சமூக விரோத செயல்களில் சிக்குகிறார் அஞ்சலி. இச்செய்தியினை கேட்டு அதிர்ச்சியடையும் விஜய் சேதுபதி, அஞ்சலி இருக்கும் இடத்தை தேடி செல்கிறார். அஞ்சலியை காப்பாற்ற செல்லும் விஜய் சேதுபதி தனக்கே தெரியாமல் வேறு ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார். இவரின் பிரச்சனையிலிருந்து இவர் மீண்டு அஞ்சலியை காப்பாற்றினாரா? என்ன பிரச்சனை அது? இறுதியில் என்ன ஆயிற்று? என்பதே படத்தின் கதை. படத்தின் பற்றிய தகவல்கள்  இப்படத்தின் மூலம் இயக்குனர் அருண் குமார் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கின்றனர். மேலும் இத்திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 16-ம் தேதியும், செகண்ட் லுக் போஸ்டர் மார்ச் 7-ம் தேதியிலும் வெளியிட்டுள்ளனர் படக்குழு.  இத்திரைப்படம் வெளிநாடுகளில் இயக்க இருக்கும் என இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இத்திரைப்படத்தின்  படக்குழு அறிவித்த இரண்டு வெளியிட்டு தேதிகளில்  இப்படத்தினை  வெளியிட முடியாமல், இத்திரைப்படத்தின் ட்ரைலர் 2019 ஜூன் 16ல் வெளியாகியதில் இப்படமானது 2019 ஜூன் 27-ல்  வெளியாகியுள்ளது. மேலும்:   இப்படத்தில் பணியாற்றிருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி அறிய ரிலீஸ்  சமீபத்தில் மே மாதம் திரைக்கு வந்த தமிழ் திரைப்படங்களான அயோக்கிய, 100, கீ ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பாளர் பிரச்சனைகள் காரணமாக கூறிய தேதி மற்றும் நேரங்களில் வெளியிட முடியாமல் இருந்தது. தற்போது இந்த வரிசையில் 2 ஆண்டுகளாக இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்துடன் விஜய் சேதுபதியின் சிந்துபாத் திரைப்படமும் சேர்ந்துள்ளது. தென்னிந்தியாவில் 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி 2 . தெலுங்கு திரைப்படமான இத்திரைப்படத்தினை தமிழில் விநியோகம் செய்துள்ள கே புரொடக்‌ஷன்  நிறுவனம், தற்போது சிந்துபாத், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் பாகுபலி தயாரிப்பாளருக்கு தரவேண்டிய 17 கோடி ரூபாயை இன்னும் நிலுவையில் வைத்திருப்பதாகவும், அதனால் தங்களுக்கு தரவேண்டிய 17 கோடியை செலுத்திய பின்னரே கே புரொடக்‌ஷன் நிறுவனத்தின் திரைப்படங்களை வெளியிட வேண்டும் என பாகுபலி 2 தயாரிப்பு நிறுவனம்  ஐதரபாத்  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் கே புரொடக்‌ஷன் நிறுவனத்தின் சிந்துபாத், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களை வெளியிட ஐதரபாத்  உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆகையால் 2019 மே மாதம் 16-ஆம் தேதியில் வெளிவரவிருந்த சிந்துபாத் திரைப்படம், வெளிவராமல் இருந்தது. தற்போது 2019 ஜூன் மாதம் 27ல் இப்படமானது வெளியாகும் என படக்குழுவினரால் தரப்பட்ட அதிகாரப்பூர்வமான அறிக்கையினை தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடந்து வந்துள்ளது.
Read More

சிந்துபாத் நடிகர்கள் & படக்குழுவினர்

சிந்துபாத் அணியின் தகவல்

இயக்குனர் அருண் குமார்
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்
தொகுப்பாளர் அன்டனி ரூபன்
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் ராஜாராஜன், ஷான் சுதர்ஷன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சிந்துபாத் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
கதை என்னமோ பழசு தான். ஆனா அதுல ஸ்கின் டிரேட், மலேசியா, தாய்லாந்து, கம்போடியான்னு புதுசா ரீல் சுத்தியருக்காரு இயக்குனர் அருண்குமார். முதல் பாதி படம் ஜாலியா, கலகலப்பாக நகருது. இடைவேளை வரும் போது சீரியஸ் டோனுக்கு மாறிடுது. மாஸ் ஹீரோ படம்ன்னு முடிவு பண்ணத்துக்கு பிறகு லாஜிக் எல்லாம் எதுக்குன்னு முடிவு பண்ணிட்டார் இயக்குனர். வெளிநாட்டுல ஒரு இந்தியர் பிரச்சினையில் மாட்டிக்கிட்டா, இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்றது தான் முதல் வேலையாக இருக்கும். பாவம் அவங்க ஏற்கனவே பிஸியா இருப்பாங்கன்னு நினைச்சு, அதிகாரிகளை எல்லாம் தொந்தரவு செய்யாம விஜய் சேதுபதியே நேரா கிளம்பி தாய்லாந்து, கம்போடியான்னு ஊர் சுற்றி சண்டை போட்டு, சிலப்பல கொலைகளை செஞ்சு மனைவியை காப்பாத்துறாரு. விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்ப பற்றி நம்ம எல்லோருக்கும் நல்லாவே தெரியும். இந்த படத்துல பெரிய சர்ப்ரைஸ் 'சூப்பர்' சூர்யா தான். ஒவ்வொரு சீன்லயும் செமையா ஸ்கோர் செஞ்சிருக்காரு. அதுவும் ஜார்ஜ்கிட்ட 'சூப்பர்' கதை சொல்லும் இடம் செம கலாய். அப்பாவோட சேர்ந்து செமையா லூட்டி அடிச்சிருக்காரு. பெண்களை பொருளாக மட்டுமே பார்க்கும் ஒரு உலகை கண்முன் நிறுத்திருக்கிறார் இயக்குனர் அருண்குமார். ஸ்கின் டிரேடிங் எனும் ஒரு புதிய மாஃபியாவை நமக்கு அறிமுகப்படுத்தி பயமுறுத்துகிறார். ஆனால் இதையெல்லாம் அளவுக்கு மீறிய சினிமாதனத்தில் சொல்லியிருப்பது தான் ஒரு உறுத்தல். அதுவும், சூர்யாவை டிரம்பில் வைத்து, 40வது மாடியில் இருந்து உருட்டிவிடுவதெல்லாம் டூ மச் புரோ.

சிந்துபாத் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சிந்துபாத்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+