twitter
    Tamil»Movies»Sixer»Story

    சிக்சர் கதை

    சிக்சர் இயக்குனர் சச்சி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை வால்மேட் நிறுவனம் சார்பில் ஸ்ரீதர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    கதை 
    சின்னதம்பி படத்துல வரும் கவுண்டமணியின் தற்போதை வெர்ஷன் தான் ஹீரோ வைபவ். பகல் முழுவதும் வெளியில் சுற்றும் வைபவ், மாலை 6 மணி அடிக்கும் போது டான் என வீட்டில் இருப்பார். இதனால் அவருக்கு நண்பர்கள் வைக்கும் பட்டப்பெயர் ஆறுமணிக்காரன். அம்மா ஸ்ரீரஞ்சனியும், அப்பா இளவரசும், மகனுக்கு எப்படி கல்யாணம் செய்து வைப்பது என விழிப்பிதுங்கி நிற்கும் போது அந்த பொறுப்பை தானே எடுத்துக்கொள்கிறார் வைபவ்.

    ஒரு நாள் மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் போது, வண்டி மக்கர் செய்ய, அப்படியே அதை பீச்சோரம் ஓரங்கட்டிவிட்டு நண்பன் சதீஷுக்கு போன் செய்து தன்னை பிக்பக் செய்ய சொல்லிவிட்டு, கையில் சுண்டல், காதல் ஹேட்போன் என கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்குகிறார் நம்ம ஹீரோ.

    அப்போது பார்த்து தொழிலதிபர் ஆர்.என்.ஆர்.மனோகருக்கு கல்லூரி மாணவிகளை மூளைசலவை செய்து அனுப்பும் விமலா ராணியை (எங்கோ கேட்டது போல் இருக்குள்ள... ஆமாங்க அவங்களே தான்) எதிர்த்து சில இளைஞர்கள் பீச்சில் போராட்டம் நடத்துகிறார். அதுவும் கண்ணு தெரியாத நம்ம ஹீரோவை சுற்றி அமர்ந்து கோஷம் போடுகிறது கும்பல். இதனை தனது தொலைக்காட்சிக்காக லைவ் கவரேஜ் செய்கிறார் ஹீரோயின் பல்லக் லல்வாணி.

    போராட்டத்தை பார்த்து கடுப்பாகும் வில்லனின் ஆட்கள் போராட்டக்காரர்களை அடித்து உதைக்கிறார்கள். எல்லோரும் தெறித்து ஓட, வைபவ் மட்டும் அசராமல் அமர்ந்திருக்கிறார். சூழ்நிலைகள் எல்லாம் சாதகமாக மாற, மக்கள் தலைவனாக உருவெடுக்கிறார் நம்ம ஹீரோ. இதனால் பல்லக் லல்வாணி வைபவ் மீது இம்பிரஸ் ஆகி காதலில் விழுகிறார். அடுத்த நாள் பகலில் வைபவும் லல்வாணியை நேரில் பார்த்து லவ்வ ஆரம்பிக்கிறார். மாலைக்கண் நோய் இருப்பதை மறைத்து டிராமா செய்கிறார். இது எது வரை நீடிக்கிறது ? இவர்களது காதல் என்னாவாகிறது என்பது தான் மிச்ச சொச்சப் படம்.
    **Note:Hey! Would you like to share the story of the movie சிக்சர் with us? Please send it to us ([email protected]).