X
ஸ்கெட்ச்
Action | 12 Jan 2018 |
Tamil

ஸ்கெட்ச் கதை

ஸ்கெட்ச் வாலு பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம் மற்றும் தமன்னா நடித்துள்ளனர். 

கதை : 

வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் செய்யும் சேட்டாக ஹரிஷ் பெரடி. இவரது வலது கையாக வாடிக்கையாளர்களின் வாகனங்களை சீஸ் செய்பவர் அருள்தாஸ். ஒரு தகராறில் அருள்தாஸின் கை வெட்டப்பட, அவரது இடத்துக்கு வருகிறார் ஸ்கெட்ச் விக்ரம். அந்த இடத்தைப் பிடிக்க நினைத்திருந்த ஆர்.கே.சுரேஷ் இதனால் அவர்களிடமிருந்து வெளியேறி தொடர்ந்து இவர்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். அருள்தாஸ் செய்த வண்டி சீஸ் செய்யும் வேலைகளை கச்சிதமாக முடித்து நம்பிக்கையைப் பெறுகிறார் விக்ரம். விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ்ஸே ஆகாது என்பதால் பயங்கர செல்வாக்கு.

அப்படி, ஒரு வண்டியைத் தூக்கும்போது பார்க்கும் தமன்னாவை காதலிக்கத் தொடங்குகிறார் விக்ரம். தமன்னாவும் தன்னைக் காதலிப்பதாக நண்பர்களிடம் கெத்துக்காக பொய் சொல்லி பிறகு உண்மை தெரிந்து விடுகிறது. பிறகு, தனக்கு இது சரியாக வராது என தமன்னாவை விட்டு விலக நினைக்கிறார் விக்ரம். விக்ரமை முதலில் கெட்டவனாகப் புரிந்துகொள்ளும் தமன்னா, பிறகு உண்மை அறிந்து காதலிக்கிறார். வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் பிரபல தாதாவாக இருக்கும் குமாரின் காரை சேட்டின் ஆசைக்காக தூக்குகிறார் விக்ரம். விக்ரமின் சாகசத்தை சேட் கொண்டாட, அதைப் பொறுக்கமுடியாமல் விக்ரம் டீமை ஒவ்வொருத்தராக போட்டுத்தள்ள பிளான் போடுகிறார் குமார். அதன்படி, 'கல்லூரி' வினோத், 'கபாலி' விஷ்வந்த், ஶ்ரீமன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் ஆர்.கே.சுரேஷ்தான் என விக்ரம் அவரைத் தேட, ஆர்.கே.சுரேஷும் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். இந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்களை விக்ரம் ஒருபுறம் தேட, போலீஸ் இன்னொரு புறம் தேடுகிறது.

விக்ரமின் நண்பர்களைக் கொலை செய்தவர்கள் விக்ரமின் கைகளில் சிக்கினார்களா, போலீஸ் தேடல் என்ன ஆனது, இதற்கிடையே வேறு மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லிப் பிரிந்த விக்ரம் தமன்னாவோடு சேர்ந்தாரா என்பது தான் மீதிக்கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+