twitter
    Tamil»Movies»Sketch
    ஸ்கெட்ச்

    ஸ்கெட்ச்

    Release Date : 12 Jan 2018
    3/5
    Critics Rating
    4/5
    Audience Review
    ஸ்கெட்ச் வாலு பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம் மற்றும் தமன்னா நடித்துள்ளனர். 

    கதை : 

    வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் செய்யும் சேட்டாக ஹரிஷ் பெரடி. இவரது வலது கையாக வாடிக்கையாளர்களின் வாகனங்களை சீஸ் செய்பவர் அருள்தாஸ். ஒரு தகராறில் அருள்தாஸின் கை வெட்டப்பட, அவரது இடத்துக்கு வருகிறார் ஸ்கெட்ச் விக்ரம். அந்த இடத்தைப் பிடிக்க நினைத்திருந்த ஆர்.கே.சுரேஷ் இதனால் அவர்களிடமிருந்து வெளியேறி தொடர்ந்து இவர்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். அருள்தாஸ் செய்த வண்டி சீஸ் செய்யும் வேலைகளை கச்சிதமாக முடித்து...
    • விஜய் சந்தர்
      விஜய் சந்தர்
      Director
    • tamil.filmibeat.com
      3/5
      யூகிக்க முடியாத க்ளைமாக்ஸுடன் ஒரு மெசேஜையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மெசேஜ் சொல்றதுக்காக அப்படி வெச்சாரா, இல்லை கதையை அப்படி வெச்சுட்டுத்தான் மெசேஜ் சொல்லலாம்னு டைரக்டருக்கு ஐடியா வந்துச்சானு தெரியலை.

      விக்ரம், எந்த கேரக்டர் என்றாலும் அதற்காக எந்த அளவுக்கும் இறங்கி நடிக்கக்கூடிய நடிகர் என்பது தெரிந்த விஷயமே. இப்படத்தில் ஒரு மாஸான ரௌடியாக ஸ்டைலிஷ் லுக் காட்டியிருக்கிறார். 'ஜெமினி' படத்தின் 'ஓ போடு' போல இதில் விக்ரமின் 'ஸ்கெட்ச் போடு'. வயதாவதே தெரியாமல் அத்தனை எனர்ஜியோடு அசத்தியிருக்கிறார் சீயான். கையால் ஸ்கெட்ச் போடுவது, கார் சேஸிங், சென்டிமென்ட் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். தமன்னாவுக்கு நடிப்பதற்கு பெரிய ரோல் இல்லையென்றாலும் அழகிலும், நடிப்பிலும் ஆளை மயக்குகிறார்.

      விக்ரமின் நண்பர்களாக வரும் ஶ்ரீமன், விஷ்வந்த், வினோத் ஆகியோர் காமெடி காட்சிகளிலும்..