twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மொத்தமே இவ்ளோதான் வசூலா...? பொங்கல் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்!

    By Shankar
    |

    Recommended Video

    சூர்யா vs விக்ரம் vs பிரபுதேவா!பொங்கல் ரேஸில் முந்தியது யார்?

    பொங்கல் பண்டிகைக்கு புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் செய்வது வழக்கமான ஒன்று. இந்த வருடம் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் நடித்த ஸ்கெட்ச், பிரபுதேவா நடித்த குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின. பாக்ஸ் ஆபீசில் சுமார் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகும் என கணிக்கப்பட்ட பொங்கல் பண்டிகை படங்கள் சுமார் 60 கோடி ரூபாய் வசூலுடன் முடிந்து போயுள்ளன.

    ரூ 30 கோடி

    ரூ 30 கோடி

    தமிழகத்தில் அதிகமான தியேட்டர்களில் ரீலீஸ் செய்யப்பட்ட படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. அனைத்து ஏரியாக்களும் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரமான ஒரே படம் இது. கடந்த ஐந்து நாட் களில் மொத்த வசூலாக பெற்ற தொகை சுமார் 30 கோடி ரூபாய் மட்டுமே. சூர்யா நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் இப்படம் சுமாரான ஓபனிங்குடன் தொடங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்பதாலும், குடும்பத்துடன் பார்க்க வேறு படங்கள் இல்லை என்பதாலும் இந்த வசூல் என்கிறது தியேட்டர் வட்டாரங்கள்.

    ஹிட்டா...?

    ஹிட்டா...?

    விக்ரம் இரு வேடங்களில் நடித்து 2016 செப்டம்பரில் வெளியான இருமுகன் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.ஒரு வருட இடைவெளியில் பொங்கல் வெளியீடாக 'ஸ்கெட்ச்' அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

    தானா சேர்ந்த கூட்டம் திரையிட்ட தியேட்டர்களுக்கு இணையான எண்ணிக்கையில்தான் ரீலீஸ் ஆனது 'ஸ்கெட்ச்' படம்.

    உலகம் முழுவதும் கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நேரடியாக ரீலீஸ் செய்த இப்படத்தின் வெற்றி தோல்வி தயாரிப்பாளரையே சேரும். கடந்த ஐந்து நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 24 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது.

    குலேபகாவலி

    குலேபகாவலி

    இரு ஜாம்பவான்களுடன் பொங்கல் போட்டியில் களமிறங்கிய படம் 'குலேபகாவலி' பிரபுதேவா, ஹன்சிகா ஜோடி நடித்த காமெடி திரில்லர் படம் ரசிகர்களிடம் சென்றடையவில்லை.

    சூர்யா, விக்ரம் படங்களின் ஆதிக்கத்தில் குலேபகாவலி பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மங்கிப் போனது. ஐந்து நாட்களில் தட்டு தடுமாறி 3 கோடி ரூபாய் தமிழ் நாட்டில் வசூல் செய்திருக்கிறது.

    வசூல்

    வசூல்

    நட்சத்திர அந்தஸ்து மிக்க மூன்று படங்களும் வெற்றி படமாக பொங்கலுக்கு ஜொலிக்கவில்லை என்கிற உண்மையை கதாநாயக நடிகர்களுக்கு உணர்த்தியிருக்கிறது வசூல். கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் நாயகிகளுக்காகவும் படம் வசூலை குவிக்காது. கதை இல்லை என்றால் பாக்ஸ் ஆபீசில் படவசூல் பாதாளத்திற்கு சென்று விடும் என்பதை பொங்கல் படங்கள் பொட்டில் அறைந்து சொல்லியிருக்கின்றன.

    வெற்று ஆரவாரம்

    வெற்று ஆரவாரம்

    யூடியூப்பில் டீஸர், டிரைலர் ஆகியவற்றை அதிகம் பேர் பார்த்தனர் என்பதால் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கிடைக்காது. அது வெற்று ஆரவாரம், திட்டமிட்டு உருவாக்கப்படும் மாயை அது என்பதை தொழில் நுட்ப வளர்ச்சியில் ரசிகன் தெரிந்து வைத்திருக்கிறான்.

    திரைக்கதையும், அதனை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் மட்டுமே படங்களின் வெற்றிக்கு வழிகோலும் என்பதை திரையுலகம் புரிந்து கொண்டு செயல்படுவார்களா?

    English summary
    Here is the Box Office report of Pongal release movies Thaana Serntha Koottam, Sketch and Gulebaghavali.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X