»   »  'ஸ்கெட்ச்' - படம் எப்படி? #SketchReview

'ஸ்கெட்ச்' - படம் எப்படி? #SketchReview

Posted By:
Subscribe to Oneindia Tamil
விக்ரமின் ஸ்கெட்ச் படத்தின் விமர்சனம்,...வீடியோ

'வாலு' இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஹரீஷ் பெரடி, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'ஸ்கெட்ச்'. செம ஸ்டைலிஷ் சீயான் விக்ரம், ஸ்வீட் பியூட்டி தமன்னா இருவரும் இந்த நார்த் மெட்ராஸ் கதையின் மூலம் இணைந்திருக்கிறார்கள். விக்ரமை வைத்து இயக்குநர் போட்ட 'ஸ்கெட்ச்' ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறதா? வாங்க பார்க்கலாம்.

ஸ்கெட்ச்

ஸ்கெட்ச்

வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் செய்யும் சேட்டாக ஹரிஷ் பெரடி. இவரது வலது கையாக வாடிக்கையாளர்களின் வாகனங்களை சீஸ் செய்பவர் அருள்தாஸ். ஒரு தகராறில் அருள்தாஸின் கை வெட்டப்பட, அவரது இடத்துக்கு வருகிறார் ஸ்கெட்ச் விக்ரம். அந்த இடத்தைப் பிடிக்க நினைத்திருந்த ஆர்.கே.சுரேஷ் இதனால் அவர்களிடமிருந்து வெளியேறி தொடர்ந்து இவர்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். அருள்தாஸ் செய்த வண்டி சீஸ் செய்யும் வேலைகளை கச்சிதமாக முடித்து நம்பிக்கையைப் பெறுகிறார் விக்ரம். விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ்ஸே ஆகாது என்பதால் பயங்கர செல்வாக்கு.

விக்ரம் - தமன்னா

விக்ரம் - தமன்னா

அப்படி, ஒரு வண்டியைத் தூக்கும்போது பார்க்கும் தமன்னாவை காதலிக்கத் தொடங்குகிறார் விக்ரம். தமன்னாவும் தன்னைக் காதலிப்பதாக நண்பர்களிடம் கெத்துக்காக பொய் சொல்லி பிறகு உண்மை தெரிந்து விடுகிறது. பிறகு, தனக்கு இது சரியாக வராது என தமன்னாவை விட்டு விலக நினைக்கிறார் விக்ரம். விக்ரமை முதலில் கெட்டவனாகப் புரிந்துகொள்ளும் தமன்னா, பிறகு உண்மை அறிந்து காதலிக்கிறார். வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள்.

தொடர் கொலைகள்

தொடர் கொலைகள்

இன்னொரு பக்கம் பிரபல தாதாவாக இருக்கும் குமாரின் காரை சேட்டின் ஆசைக்காக தூக்குகிறார் விக்ரம். விக்ரமின் சாகசத்தை சேட் கொண்டாட, அதைப் பொறுக்கமுடியாமல் விக்ரம் டீமை ஒவ்வொருத்தராக போட்டுத்தள்ள பிளான் போடுகிறார் குமார். அதன்படி, 'கல்லூரி' வினோத், 'கபாலி' விஷ்வந்த், ஶ்ரீமன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் ஆர்.கே.சுரேஷ்தான் என விக்ரம் அவரைத் தேட, ஆர்.கே.சுரேஷும் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். இந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்களை விக்ரம் ஒருபுறம் தேட, போலீஸ் இன்னொரு புறம் தேடுகிறது.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்

விக்ரமின் நண்பர்களைக் கொலை செய்தவர்கள் விக்ரமின் கைகளில் சிக்கினார்களா, போலீஸ் தேடல் என்ன ஆனது, இதற்கிடையே வேறு மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லிப் பிரிந்த விக்ரம் தமன்னாவோடு சேர்ந்தாரா என்பது தான் மீதிக்கதை. யூகிக்க முடியாத க்ளைமாக்ஸுடன் ஒரு மெசேஜையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மெசேஜ் சொல்றதுக்காக அப்படி வெச்சாரா, இல்லை கதையை அப்படி வெச்சுட்டுத்தான் மெசேஜ் சொல்லலாம்னு டைரக்டருக்கு ஐடியா வந்துச்சானு தெரியலை.

விக்ரம் ஸ்டைல்

விக்ரம் ஸ்டைல்

விக்ரம், எந்த கேரக்டர் என்றாலும் அதற்காக எந்த அளவுக்கும் இறங்கி நடிக்கக்கூடிய நடிகர் என்பது தெரிந்த விஷயமே. இப்படத்தில் ஒரு மாஸான ரௌடியாக ஸ்டைலிஷ் லுக் காட்டியிருக்கிறார். 'ஜெமினி' படத்தின் 'ஓ போடு' போல இதில் விக்ரமின் 'ஸ்கெட்ச் போடு'. வயதாவதே தெரியாமல் அத்தனை எனர்ஜியோடு அசத்தியிருக்கிறார் சீயான். கையால் ஸ்கெட்ச் போடுவது, கார் சேஸிங், சென்டிமென்ட் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். தமன்னாவுக்கு நடிப்பதற்கு பெரிய ரோல் இல்லையென்றாலும் அழகிலும், நடிப்பிலும் ஆளை மயக்குகிறார்.

நடிகர்கள்

விக்ரமின் நண்பர்களாக வரும் ஶ்ரீமன், விஷ்வந்த், வினோத் ஆகியோர் காமெடி காட்சிகளிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சூரிக்கு காமெடியனாக இல்லாமல் சிறிய வேடம் ஒன்று. மிரட்டல் ரௌடிகளாக அருள்தாஸும், ஆர்.கே.சுரேஷும் கவனம் ஈர்க்கிறார்கள். தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் இந்தப் படத்தில் எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கிறார். எம்.எல்.ஏ-வுக்கு உண்டான வேலையையே மறந்துவிட்டு ரௌடிக்கும், போதைப்பொருள் விற்பவர்களுக்கும் புரோக்கராகத்தான் படம் முழுவதும் வருகிறார்.

படம் எப்படி

படம் எப்படி

தமனின் இசையில் 'கனவே கனவே' பாடலும், 'தாடிக்காரா' பாடகும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சில பாடல்கள் படத்தின் ஓட்டத்துக்கு வேகத் தடையாகவே செயல்படுகின்றன. பின்னணி இசை விக்ரமுக்கு கெத்து கூட்டுகிறது. சுகுமாரின் ஒளிப்பதிவில் விக்ரமையும், தமன்னாவையும் அழகாகக் காட்டியதைத் தவிர சிறப்பாக ஒன்றுமில்லை. ரூபனின் படத்தொகுப்பு ஓகே ரகம். படம் அவ்வப்போது நிமிர்ந்து உட்காரச் செய்து பின்னர் சறுக்குகிறது. யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டுகாக பாராட்டலாம். வழக்கமான மசாலா கதையில், பெயருக்கு மெசேஜையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார்கள். விக்ரமின் ஸ்டைல், ஸ்கிரீன் பிரசன்ஸுக்காக இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம். மொத்தத்தில் 'ஸ்கெட்ச்' - ஆட்டத்தில் இருக்கு!

English summary
Vikram, Tamannah starrer 'Sketch' movie is directed by Vijay Chandar. 'Sketch' is an action thriller film which has unacceptable twists. Read Sketch movie review here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X