"அதுக்கு காரணம் நான்தான் எனக் கூறிய விக்ரம்" - 'ஸ்கெட்ச்' படத்தில் சூரி மிஸ்ஸிங்!

By Vignesh Selvaraj

சென்னை : 'வாலு' பட டைரக்டர் விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம், தமன்னா மற்றும் பலர் நடிக்க கடந்த வெள்ளிக்கிழமை பொங்கல் ரிலீஸாக வெளிவந்த படம் 'ஸ்கெட்ச்'.

இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களுடன் ஓடிவரும் 'ஸ்கெட்ச்' படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தை வெளியிட்ட எஸ்.தாணு, இயக்குனர் விஜய் சந்தர், இசையமைப்பாளர் தமன், விக்ரம், ஸ்ரீமன், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்கெட்ச் படம் வெற்றி

ஸ்கெட்ச் படம் வெற்றி

'ஸ்கெட்ச்' படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக படத்தை வெளியிட்ட எஸ்.தாணு தெரிவித்தார். படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் படத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசினார்.

சூரியின் காமெடி மிஸ்ஸிங்

சூரியின் காமெடி மிஸ்ஸிங்

'ஸ்கெட்ச்' படத்தில் காமெடியன் சூரி வெகுசில காட்சிகளில் மட்டுமே வருகிறார். அதுவும், தனி ட்ராக் போல அறிமுகமாகி திடீரென விக்ரமுக்கு தெரிந்தவராக வருகிறார். ஜாங்கிரி மதுமிதாவின் கணவராக சூரி பைக் ஷோரூமில் பைக் திருடும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

பைக் திருடர்

பைக் திருடர்

ஹீரோயின் தமன்னாவின் ஸ்கூட்டியையும் திருடியது சூரி என பின்னால் ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சி சரியாக கனெக்ட் ஆகாததைப் போல இருக்கும். சூரி வரும் காட்சிகள் நிறைய நீக்கப்பட்டிருப்பதை படம் பார்த்த அனைவருமே உணர முடிந்தது.

சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்

சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்

'ஸ்கெட்ச்' படம் பற்றி வந்த பல விமர்சனங்களிலும் படத்தில் சூரி வந்துவிட்டு காணாமல் போய்விடுகிறார் என்று கூறப்பட்டிருந்தது. அது பற்றி நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், அதற்கு தானே பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கு சூரியிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

நிறைய சீன்களில் ஒட்டவில்லை

நிறைய சீன்களில் ஒட்டவில்லை

"சூரி இந்தப் படத்துல சில சீன்ஸ்ல வந்துட்டுப் போவாரு, அதுக்குக் காரணம் நான் தான். அவர் நிறைய சீன்ல இருந்தாரு.. சில இடத்துல ஒட்டலை.. அதனால, சில சீன்களை தூக்க வேண்டியதா இருந்திச்சு. அதுக்கு முழு பொறுப்பு நான் எடுத்துக்கறேன் சூரி.

மரியாதைக்குரிய நடிகர்

மரியாதைக்குரிய நடிகர்

சூரி, மரியாதைக்குரிய நேர்மையான ஒரு நடிகர். அவர் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. படத்துல அவருடைய காட்சிகள் கொஞ்சம் ஸ்பீட் பிரேக்கரா இருந்திச்சு. அதை அவர்கிட்டேயே சொன்னோம். சரி தூக்கிடுங்க பரவாயில்லைன்னு சொன்னாரு.. அதுக்கு முழுக்காரணம் நான் தான். மன்னிச்சிக்குங்க சூரி," என மேடையிலேயே மன்னிப்பு கேட்டார் விக்ரம்.

விக்ரம் காமெடியன்

விக்ரம் காமெடியன்

"அடுத்த படத்துல நீங்க ஹீரோவா பண்ணுங்க, நான் காமெடியனா பண்றேன். இல்லை இரண்டு பேருமே சேர்ந்து பண்ணலாம். நாம கண்டிப்பா பண்ணுவோம்." என சூரியை சமாதானப்படுத்திப் பேசினார் விக்ரம். தூக்கிய காட்சிகளுக்காக நடிகரே மன்னிப்பு கேட்டது திரையுலகினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X