தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

05 Aug 2016
கதை
தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் இயக்குனர் பிரேம் சாய் இயக்கத்தில் கோதம் மேனன் இயக்கத்தில் ஜெய், எமி கெளதம், சந்தானம் மற்றும் வி டி வி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ளார்.

கதை :

தமிழ்செல்வன் (ஜெய்) சென்னைக்கு வேலை தேடி அக்கா மற்றும் மாமா (விடிவி கணேஷ்) வீட்டில் தங்கியிருக்கும் இளைஞர். இவர் பல இடங்களில் வேலைக்காக முயற்சிக்கிறார். அவ்வேளையில், காதி கடையில் வேலை பார்க்கும் பெண் காவ்யாவை சந்திக்கிறார். பார்த்ததும் காதல்.  தன் காதலியை தினமும் சந்திக்கும் நோக்கத்தோடு, தமிழ் செல்வன் தன் நண்பன் சந்தானம் உதவியோடு கூரியர் அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார். 

மற்றொரு புறத்தில், கர்ப்பிணிகளின் ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து கடத்தும் சட்டவிரோதமான செயலை மருத்துவர் மற்றும் விஞ்ஞானி அருண் ஐரோப்பாவிலிருந்து செய்து வருகிறார். 

அந்த சட்டவிரோதமான செயல் சம்மந்தப்பட்ட ஒரு கூரியர் தமிழ்செல்வன் கையில் பிடிபட, மருத்துவர் அருணின் ஆட்கள் தமிழ்ச்செல்வனை கொல்ல திட்டமிட்டு துரத்துகிறது. அக்கும்பலிடம் இருந்து தமிழ்செல்வன் எவ்வாறு விடுபட்டார் என்பதே மீதிக்கதை. 
Buy Movie Tickets
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil