தமிழ் படம் 2 இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே, சதிஷ் மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்த வஞ்சப்புகழ்ச்சி நகைச்சுவை திரைப்படம்.
கதை :
மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சாதிக் கலவரம் வெடிக்கிறது. போலீஸ், ராணுவம் என யாராலும் கட்டுப்படுத்த முடியாத அந்த கலவரத்தை அடக்க முன்னாள் போலீஸ் அதிகாரியான சிவா, பயங்கர பில்டப்புடன் களமிறங்குகிறார். மொக்கையாக பேசியே கலவரத்தை அடக்கும் சிவாவை, மீண்டும் போலீசில் சேரும்படி வற்புறுத்துகிறார் உயரதிகாரி சேத்தன். ஆனால் அதை சிவா மறுத்துவிடவே, கடுப்பாகும் வில்லன் 'பி', சிவாவின் மனைவி திஷா பாண்டேவை கொலை செய்து லட்சியத்தை சாதிக்கிறார்.
மீண்டும் போலீசில் இணையும் சிவா, வில்லன் பி-யை பழிவாங்க துடிக்கிறார். ஆனால் சாகாவரம் பெற்ற வில்லன் பி அதை முறியடிக்க பறக்கிறார். கடைசியில் என்ன ஆகிறது.. எல்லோரும் எப்படி கண்டம் ஆனார்கள் என்பது மீதிக் கதை.