X
தமிழ் » திரைப்படங்கள் » தமிழ் படம் 2
தமிழ் படம் 2

தமிழ் படம் 2

Comedy | 12 Jul 2018 | U | 145 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

தமிழ் படம் 2 கதை

தமிழ் படம் 2   இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே, சதிஷ் மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்த வஞ்சப்புகழ்ச்சி நகைச்சுவை திரைப்படம்.  கதை : மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சாதிக் கலவரம் வெடிக்கிறது. போலீஸ், ராணுவம் என யாராலும் கட்டுப்படுத்த முடியாத அந்த கலவரத்தை அடக்க முன்னாள் போலீஸ் அதிகாரியான சிவா, பயங்கர பில்டப்புடன் களமிறங்குகிறார். மொக்கையாக பேசியே கலவரத்தை அடக்கும் சிவாவை, மீண்டும் போலீசில் சேரும்படி வற்புறுத்துகிறார் உயரதிகாரி சேத்தன். ஆனால் அதை சிவா மறுத்துவிடவே, கடுப்பாகும் வில்லன் 'பி', சிவாவின் மனைவி திஷா பாண்டேவை கொலை செய்து லட்சியத்தை சாதிக்கிறார். மீண்டும் போலீசில் இணையும் சிவா, வில்லன் பி-யை பழிவாங்க துடிக்கிறார். ஆனால் சாகாவரம் பெற்ற வில்லன் பி அதை முறியடிக்க பறக்கிறார். கடைசியில் என்ன ஆகிறது.. எல்லோரும் எப்படி கண்டம் ஆனார்கள் என்பது மீதிக் கதை.
Read More

தமிழ் படம் 2 நடிகர்கள் & படக்குழுவினர்

தமிழ் படம் 2 அணியின் தகவல்

இயக்குனர் சி எஸ் அமுதன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை என் கண்ணன்
தயாரிப்பாளர் சஷிகாந்த்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தமிழ் படம் 2 விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
காட்சிக்கு காட்சி உள்ளூர் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை நையாண்டி செய்திருக்கிறார்கள். பழைய தேவர் மகன், லேட்டஸ்ட் கபாலி, அதுக்கு சீனியரான மெட்ராஸ், வேதாளம், வீரம், விவேகம், துப்பாக்கி, வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, பாகுபலி, வால்டர் வெற்றிவேல் என 30க்கும் அதிகமான படங்களின் காட்சிகளை கேலி செய்திருக்கிறார் இயக்குனர் அமுதன். இதுகூட பரவாயில்லை... இன்னும் திரைக்கே வராத ரஜினியின் 2.0 படத்தையும் விட்டு வைக்கவில்லை தமிழ்படம் 2. ரஜினி, கமல், அஜீத், விஜய், விஷால், தனுஷ், சூர்யா, ஸ்ருதிஹாசன், ஜெனிலியா, ரித்விகா எம்.ஜி.ஆர்., டி.ராஜேந்தர் வரை வகை தொகை இல்லாமல் கலாய்த்திருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் மட்டுமல்ல நரேந்திர மோடி, ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை இயக்குனர். வச்சு செய்து விட்டார்கள். நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இதில் காமெடி வில்லன் ப்ரொமோஷன். மொத்தம் 15 கெட்டப்புகள். தேவர் மகன் நாசர், 16 வயதினிலே பரட்டையில் இருந்து 2.0 வில்லன் அக்ஷய் குமார் வரை அனைத்து வில்லன் கெட்டப்புகளையும் போட்டு லைக்ஸ்களை அள்ளுகிறார். சாகாவரம் பெற்ற வில்லன் பீயாராக அசத்தியிருக்கிறார். ஆனால் சிரிப்பு மூட்ட தவறிவட்டார்.

தமிழ் படம் 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தமிழ் படம் 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+