டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் ஹாலிவுட் இயக்குனர் டிம் மில்லர் இயக்கத்தில் உருவாகும் அதிரடி மற்றும் அரசியல் புனைவு திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமிரான் மற்றும் தயாரிப்பாளர் டேவிட் எலிசன் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஜுங்கி எக்ஸ் எல் இசையமைத்துள்ளார்.
டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் திரைப்படத்தின் தகவல்கள்
டெர்மினேட்டர் சீரியஸில் முன்னணி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் அர்னோல்ட் இப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் டெர்மினேட்டர் சீரியஸில் உருவாகும் 7வது திரைப்படமாகும். இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் லிண்டா ஹாமில்டன், நடாலியா ரெய்ஸ், மெக்கன்சி டேவிஸ் நடித்துள்ளனர்.
அறிவியல் புனைவை கொண்டு அதிரடியாக உருவாகும் இப்படத்தினை ஒளிப்பதிவாளர் கென் செங் ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ஜூலியன் கிளார்க் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு இப்படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமிரான் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.
தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமிரான் தயாரிப்பு நிறுவனமான லைட்ஸ்ட்ரோம் என்டேர்டைன்மெண்ட் மற்றும் பாராமென்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தினை பாராமென்ட் பிக்சர்ஸ், டென்சென்ட் பிக்சர்ஸ், மற்றும் 20த் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் இணைந்து உலகம் முழுவதும் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.
டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் திரைப்படத்தின் கதை
மனித உணர்வும் ரோபோ உடம்பையும் கொண்ட கிரேஸ் மற்றும் டெர்மினேடர் அர்னால்டு மற்றும் சிலர் இணைந்து 'டேனியை' வில்லன் டெர்மினேடரிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு . ஜட்ஜ்மெண்ட் டே படத்திற்கும் இந்த படத்திற்கும் இருக்கும் ஒற்றுமை அந்த படத்தின் வில்லனை போலவே இந்த படத்து வில்லனும் மெட்டலாக இருந்து உருகி உருகி வந்து டேனியை கொல்ல வருகிறான். அவன் ஏன் கொல்ல வருகிறான்,அவனை ஹீரோ அர்னால்டு எப்படி தடுத்தார் என்பதே படத்தின் மீதி கதை.