தேன் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண் குமார், அபர்ணதி நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அம்பலவாணன் மற்றும் பிரேமா தயாரிக்க, இசையமைப்பாளர் சனத் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
தேன் திரைப்படத்தின் கதை
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள குறிஞ்சிக்குடி என்னும் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் நாயகன், தருண் குமார். இவர் மலைப் பகுதிகளில் தேன் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். அதே மலைப் பகுதிகளில் மற்றொரு மலைக் கிராமத்தை சேர்ந்த நாயகி அபர்ணதி, தனது உடல்நலக் குன்றிய தந்தைக்கு மலை தேன் தேடி அழைகிறார்.
அச்சமயம் நாயகன் உதவியில் நாயகி அபர்ணதிக்கு மலை தேன் கிடைக்கிறது. இவர்களின் இந்த அறிமுகம் காதலாக மாற, பின் இரு வீட்டாரின் ஒப்புதல் படி திருமணம் நடக்க முடிவு செய்யப்படுகிறது. ஆனால் அந்த ஊர் வழக்கப்படி சில சடங்குகள் தடங்கலாக முடிகிறது. இதனால் இவர்களின் திருமணம் நிறுத்தப்படுகிறது.
பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொள்ளும், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. பின் சந்தோசமாக வாழும் இவர்களின் வாழ்வில், எதிர்பாராத விதத்தில் நாயகி அபர்ணதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுகிறார். இவரை காப்பாற்ற தருண் நகரத்திற்கு அழைத்து வருகிறார். ஆனால் நகர பகுதிகளில் நாயகி அபர்ணதிக்கு சிகிச்சை அளிக்க அரசாங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்.
இறுதியில் நாயகி அபர்ணதி உயிர் பிழைத்தாரா? அந்த நோய்யின் காரணம் என்ன? ஏன் இவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படுகிறார்கள்? என்பதே படத்தின் அழகான திரைக்கதை.