தலைவி கதை

  தலைவி இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில், தயாரிப்பாளர் விஷ்ணு இந்துரி தயாரிப்பில் உருவாகும் மறைந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று (சுயசரிதை) திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

  ஒரு உண்மை கதையினை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல் மற்றும் படத்தொகுப்பாளர் ஹேமந்தி சர்கர் பணியாற்றியுள்ளனர். இப்படத்தினை ஹிந்தி திரையுலக பிரபல தயாரிப்பாளர்களான விஷ்ணு வரதன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர் சிங் தனது தயாரிப்பு நிறுவனமான 'விப்ரி மீடியா கர்மா மீடியா அண்ட் என்டேர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.

  தலைவி படத்தின் பணியாற்றியுள்ள படக்குழு மற்றும் படத்தின் புகைப்படங்களுக்கு

  தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர்/ பிரபல திரைப்பட நடிகையாக புகழ் பெற்றுள்ள 'அம்மா' ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனௌத் நடித்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்க, கருணாநிதியாக நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். தலைவி படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் மிக கவனமாகவும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்க்கும் கச்சிதமாய் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்கின்றனர் படக்குழு. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகி '2020 ஜூன் 26ல்' வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

  தலைவி படத்தின் பிரத்தியேக தகவல்கள்

  இயக்குனர் ஏ. எல். விஜய் தலைவி படத்தினை பல போராட்டங்களை கடந்து இயக்கியுள்ளார். ஒரு வரலாற்று படமாக உருவாகும் இப்படத்திற்கு பிரபல திரைக்கதை எழுத்தாளர் விஜேந்திர பிரசாத் இக்கதைக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் பிரபல தென்னிந்திய படமாக வெளியாக உலகளவில் புகழ் பெற்ற 'பாகுபலி' படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆவார்.

  தலைவி படமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதை படம் என்பதால் இப்படத்தினை முக்கிய கவனத்துடன் உருவாக்குகிறார்கள். எந்த ஒரு கற்பனை காட்சிகளும், எந்த ஒரு தனி மனித கருத்துகள் உள்ளடக்கிய வசனங்கள் இல்லாமல் இப்படத்தினை மிகுந்த கவனத்துடன் இயக்குகின்றனர் படக்குழுவினர்.

  தலைவி படத்தின் ரிலீஸ் மற்றும் அறிவிப்புகள்

  இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸட் லுக் போஸ்டரை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் நாள் படக்குழுவினர் வெளியிட்டனர். இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கயிருக்கிறார் என்னும் அதிகாரப்பூர்வமான தகவலை நடிகை கங்கனா ரனௌத் பிறந்தநாளான 2019-ம் ஆண்டு 23 மார்ச்சில் வெளியிட்டுள்ளனர் படக்குழு.

  இப்படத்தின் டீஸர் 2019 நவம்பர் 23ல் வெளியாகி தமிழ் திரைப்பட ரசிகர்களிடமும், அரசியல்வாதிகளிடலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
  **Note:Hey! Would you like to share the story of the movie தலைவி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).