தி பேமிலி ஸ்டார் - இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் என பலர் நடித்திருக்கும் குடும்ப திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
தமிழ் & தெலுங்கு திரையரங்கில் வெளியாகியுள்ள தி பேமிலி ஸ்டார் திரைப்படம், ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கே யு மோகனன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மார்த்தண்ட் கே வெங்கடேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.
தி பேமிலி ஸ்டார் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை உளு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழியில் உருவாகி 2024 ஏப்ரல் 5ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
தி பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் கதை
பட்ஜெட் பத்மநாபன் போல ஒரு ரூபாய் செலவு செய்தாலும் பார்த்து பார்த்து செலவு செய்யும் கோவர்தன் எனும் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். அவரது வீட்டில் மிருணாள் தாகூர் இந்து எனும் கதாபாத்திரத்தில் குடி வருகிறார். ஆரம்பத்தில் இந்துவுக்காக பறந்து பறந்து உருகி உருகி வரும் ஃபேமிலி ஸ்டார் கோவர்தன் ஒரு கட்டத்தில் இந்துவுடைய மோடிவ் தெரிந்துக் கொண்டு அவரை வெறுத்து ஒதுங்க ஆரம்பிக்கிறார். ஆனால், விடாது கருப்பாக இந்து துரத்த இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? என்பது தான் இந்த ஃபேமிலி ஸ்டார் படத்தின் கதை.