திருமணம் (சில திருத்தங்களுடன்) இயக்குனர் சேரன் இயக்கத்தில் சேரன், தம்பி ராம்மையா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், மனோ பாலா, எம்.எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள காதல் மற்றும் குடும்பத்திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்க இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
கதை
பல ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குனர் சேரனின் பாணியில் உருவாகியுள்ள குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தின் கதாநாயகனான மகேஷ் (உமாபதி) வானொலியில் ஆர்-ஜே வாக பணிபுரிந்துவருகிறார். சேரன் ஒரு நேர்மையான அரசு ஆய்வாளராவர். அவரின் தங்கை ஆதிரா (காவ்யா சுரேஷ்).
மகேஷ் மற்றும் ஆதிரா இருவரும் காதலித்து, இவர்களின் இருவீட்டாரது சம்மதத்தையும் பெறுகின்றனர். பின்னர் இவர்களின் திருமண தேதியும் முடிவு செய்யப்படுகிறது. மகேஷின் வீட்டார் மிகவும் ஆரம்பரமானவர்கள் மற்றும் நடுத்தர குடும்பமான பெண் வீட்டாருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்படுகிறது. இறுதியில் இந்த இரண்டு துருவங்கள் எப்படி இணைந்தனர், நாயகனும் நாயகியும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.