X
தமிழ் » திரைப்படங்கள் » திருமணம் (சில திருத்தங்களுடன்)
திருமணம்

திருமணம்

Family | 01 Mar 2019 | U | 156 Mins
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

திருமணம் கதை

திருமணம் (சில திருத்தங்களுடன்) இயக்குனர் சேரன் இயக்கத்தில் சேரன், தம்பி ராம்மையா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், மனோ பாலா, எம்.எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள காதல் மற்றும் குடும்பத்திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்க இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.  கதை  பல ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குனர் சேரனின் பாணியில் உருவாகியுள்ள குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தின் கதாநாயகனான மகேஷ் (உமாபதி) வானொலியில் ஆர்-ஜே வாக பணிபுரிந்துவருகிறார். சேரன் ஒரு நேர்மையான அரசு ஆய்வாளராவர். அவரின் தங்கை ஆதிரா (காவ்யா சுரேஷ்). மகேஷ் மற்றும் ஆதிரா இருவரும் காதலித்து, இவர்களின் இருவீட்டாரது சம்மதத்தையும் பெறுகின்றனர். பின்னர் இவர்களின் திருமண தேதியும் முடிவு செய்யப்படுகிறது. மகேஷின் வீட்டார் மிகவும் ஆரம்பரமானவர்கள் மற்றும் நடுத்தர குடும்பமான பெண் வீட்டாருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்படுகிறது.  இறுதியில்  இந்த இரண்டு துருவங்கள் எப்படி இணைந்தனர், நாயகனும் நாயகியும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.
Read More

திருமணம் நடிகர்கள் & படக்குழுவினர்

திருமணம் அணியின் தகவல்

இயக்குனர் சேரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சித்தார்த் விபின்
தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

திருமணம் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
திருமண வைபவங்களை மிக ஆடம்பரமாக நடத்துவது அவசியமானது தானா என்ற கேள்வியை முன் வைக்கிறது சேரனின் 'திருமணம்' சில திருத்தங்களுடன் திரைப்படம். பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக சில ஆண்டுகளாக திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த சேரன், பெரிய இடைவெளிக்கு பின் திருமணம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். வெல்கம்பேக் இயக்குனர் சேரன். படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் சுகன்யாவினுடையது தான். அதற்கு சிறிதும் குறை வைக்காமல் சிறப்பாக செய்திருக்கிறார். தம்பி மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வது, சித்தப்பா எம்எஸ் பாஸ்கர் மீது பாசம் காட்டுவது, கஞ்சத்தனமான வேலைகளை செய்யும் சேரனை அவமானப்படுத்துவது என கிடைக்கும் கேப்பில் எல்லாம் கெட்டிமேளம் கொட்டி, அப்ளாஸ் அள்ளுகிறார். பொதுவாக சேரன் படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும். ஆனால் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்பது தான் ஏமாற்றம். இன்னும் நிறைய மெனக்கெடனும் சித்தார் விபின். பின்னணி இசையில் நாதஸ்வரம், மிருதங்கள் போன்ற வாத்தியங்களை அதிகம் பயன்படுத்தி, பார்வையாளர்களை திருமண மூடிலேயே வைத்திருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி.

திருமணம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

திருமணம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+