twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “செத்தபின் பாலூற்றி என்ன பயன்.. இப்போது சந்தோசத்தைவிட கோபம் தான் வருகிறது”.. கடும் கோபத்தில் சேரன்!

    திருமணம் படம் குறித்த ரசிகரின் பதிவுக்கு காட்டமான பதிலளித்துள்ளார் இயக்குநர் சேரன்.

    By Staff
    |

    சென்னை: திருமணம் படம் பைரஸியில் வெளியான பிறகு அதனைக் கொண்டாடுகிறீர்களே என இயக்குநர் சேரன் கோபமாக கேட்டுள்ளார்.

    சேரன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் திருமணம். விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றபோதும், இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இதனால் விரைவில் தியேட்டர்களில் இருந்து எடுத்து விட்டார்கள்.

    தற்போது ராஜாவுக்கு செக் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சேரன். அப்பட வேலைகளுக்கு நடுவே, தனது அடுத்த இயக்கத்துக்கான கதையை அவர் தயார்செய்து வருகிறார்.

    சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா! சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா!

    ரசிகரின் கோரிக்கை:

    ரசிகரின் கோரிக்கை:

    இதற்கிடையே தனது திருமணம் படத்தைப் பாராட்டுபவர்களுக்கும் அவர் பதிலளித்தும், நன்றி தெரிவித்தும் வருகிறார். அந்தவகையில் அவரது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், ‘தான் திருமணம் படத்தைப் பார்க்க தியேட்டருக்குச் சென்றதாகவும், ஆனால் அதற்குள் வேறு படம் மாற்றி விட்டதாகவும்' சோகமாகத் தெரிவித்திருந்தார். அதனால் இளைஞர்களைக் கவர மீண்டும் அப்படத்தை வெளியிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

    பைரசி:

    பைரசி:

    இதற்கு பதிலளித்துள்ள சேரன் தனது பதிவுகளில், "நீங்களெல்லாம் முதலில் பார்க்க வரவில்லை. ஆட்கள் வரவில்லை என தியேட்டர்காரர்கள் எடுத்துவிட்டனர். இப்போது வெளியிடலாம் என்றால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதற்குள் பைரசியில் படம் வந்துவிட்டது.

    கோபம் வருகிறது:

    கோபம் வருகிறது:

    அதில் படம் பார்த்து எல்லாரும் கொண்டாடுகிறார்கள், சிறந்த படம் என. இறந்தபின் பாலூற்றி என்ன பயன்? இப்போது ஒவ்வொருவரும் நல்ல படம் என சொல்லும்போது, சந்தோஷத்தைவிட கோபம்தான் வருகிறது.

    தெளிவில்லை:

    பைரசி என்ற ஒன்று இருப்பதால்தானே அதில் வரும் பார்த்துக்கொள்ளலாம் என அலட்சியமாக இருக்கீங்க. எதை எந்த நேரத்தில் செய்யவேண்டும் என்ற தெளிவு சினிமாவில் தொடங்கி நாடுவரை நம்மிடம் இல்லை..

    திருட்டை ஆதரிக்காதீர்கள்:

    திருட்டை ஆதரிக்காதீர்கள்:

    நல்லமாப்ள பாத்தா செலவுஅதிகம் ஆகுதுன்னு ஆகாவரிப்பட்ட பொறுக்கிக்கு நம்மபொண்ண கொடுப்பமா..அதிகமா இருக்குன்னு திருட்ட ஆதரிக்கிறதா. நீங்க பன்ற வேலைய அல்லது தொழில ஒருத்தன் களவாண்டா இப்படி கூலா சொல்லுவிங்களா. நான் டிக்கெட் அதிகம்ன்ற பிரச்னையும் சேர்த்துதான் தப்புன்னு பேசுறேன்." என தனது ஆதங்கத்தை ரசிகர்களிடம் கொட்டியுள்ளார்.

    English summary
    Director actor Cheran is really frustrated over his recent movie Thirumanam's result.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X