twitter

    தொரட்டி கதை

    தொரட்டி இயக்குனர் பி.மாரிமுத்து இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் ஷாமான் மித்ரு, சத்யகலா நடித்துள்ள திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக இப்படத்தின் நாயகன் ஷாமான் மித்ரு தயாரிக்க, இசையமைப்பாளர் வெட் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார்.

    கதை
    மாயன் குடும்பமும், செம்பொண்ணின் குடும்பமும் பரம்பரை பரம்பரையாக கிடை போட்டு ஆடு மேய்க்கும் கீதாரிகள். அழகு தான் மாயனின் அப்பா. தேவக்கோட்டை அருகே விளைநிலங்களில் ஆடுகளைக் கொண்டு கிடை போட்டு பிழைத்து வருகிறார். கிடைக்கூலி கொடுக்க மறுக்கும் ஒரு கருமி பணக்காரனின் நிலத்தில், பச்சைக் களையத்தை புதைத்து பூசைப் போட முயற்சிக்கிறார்கள் மாயனும் அழகும். (அப்படி செய்தால் அந்த நிலம் மலடாகும் என்பது நம்பிக்கை)

    இதை பார்த்து ஆத்திரமடைந்த பண்ணையார் அவர்கள் இருவரையும் பிடித்து தனது மாட்டுக் கொட்டகையில் அடைத்து வைக்கிறார். அன்று இரவு மாட்டை களவாட வரும் மூன்று திருடர்கள், மாயனையும் அவரது தந்தையையும் காப்பாற்றுகிறார்கள். இதனால் அவர்கள் மீது பாசம் கொள்கிறான் மாயன்.

    திருடர்களுடன் சேரும் மாயன் குடிகாரனாக மாறுகிறான். சதா குடித்துவிட்டு, தனது கிடையில் இருந்தே ஆடுகளை களவாண்டு போய் நண்பர்களுக்கு கறிச் சோறு போடுகிறான். மகனுக்கு ஒரு கால் கட்டு போட்டால் சரியாகிவிடும் என நினைக்கும் பெற்றோர் செம்பொண்ணை மணம் முடிக்க கேட்கிறார்கள். குடிகாரனுக்கு பெண்கொடுக்க நாயகியின் பெற்றோர் மறுக்கிறார்கள். ஆனால் மாயனைத்தான் கல்யாணம் செய்வேன் என அடம்பிடித்து மணக்கிறார் செம்பொண்ணு.

    இதற்கிடையே மாயனின் கூட்டாளிகளான திருடர்களை ஒரு திருட்டு வழக்கில் காட்டிக்கொடுக்கிறார் செம்பொண்ணு. போலீசார் அவர்களை பெண்டு நிமித்தி சிறையில் போடுகிறார்கள். செம்பொண்ணுவை எப்படி பழிதீர்க்க வேண்டும் என தீர்மானிக்கிறார்கள். கூடா நட்பு கேடாய் முடிந்ததா என்பதே உருகவைக்கும் தொரட்டியின் மிச்சக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie தொரட்டி with us? Please send it to us ([email protected]).