தோழர் வெங்கடேசன் இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் புது முக நடிகர்கள் அரி சங்கர் , மோனிக்கா சின்னகோட்லா நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மாதவி அரிசங்கர் தயாரிக்க, இசையமைப்பாளர் சகிஷ்னா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேதா செல்வம் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளராக இப்பட இயக்குனர் மகாசிவனுடன் இனைந்து ராஜேஷ் கண்ணா பணியாற்றியுள்ளனர்.
கதை
வாழ்வில் மற்றவர்களிடம் வேலை பார்க்க முடியாது, சொந்த தொழில் செய்துதான் வாழ்வேன் என போராடும் இப்படத்தின் நாயகன் அரி ஷங்கர் (வெங்கடேசன்), நினைத்த படியே ஒரு சொந்த தொழில் ஆரம்பித்து உழைத்து வருகிறார். அதே ஊரில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அந்த பெண் இவரை வேண்டாம் என்று அவுமானம் செய்கிறது. பின்னர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் அந்த பெண்ணிற்கு இவர் அடைக்கலம் தருகிறார்.
இவர்களுக்குள் காதல் மலர்கிறது, வசந்தமாக மாறும் இவர்களின் வாழ்வில் தீடிரென ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. எதிர்பாராமல் பேருந்து விபத்து ஒன்றில் சிக்குகிறார் நாயகன். அதன் காரணமாக இவருக்கு இரு கைகளும் வெட்டப்படுகிறது. இதனால் அரசின் இழப்பீட்டுக்காக அரசு அலுவலகத்தை அணுகுகிறார். பின்னர் இவரை அலட்சிய படுத்தும் அரசு அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் செய்கிறார், பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.