X
தமிழ் » திரைப்படங்கள் » தோழர் வெங்கடேசன்
தோழர் வெங்கடேசன்

தோழர் வெங்கடேசன்

Drama | 12 Jul 2019 | U | 111 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

தோழர் வெங்கடேசன் கதை

தோழர் வெங்கடேசன் இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் புது முக நடிகர்கள் அரி சங்கர் , மோனிக்கா சின்னகோட்லா நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மாதவி அரிசங்கர் தயாரிக்க, இசையமைப்பாளர் சகிஷ்னா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேதா செல்வம் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளராக இப்பட இயக்குனர் மகாசிவனுடன் இனைந்து ராஜேஷ் கண்ணா பணியாற்றியுள்ளனர்.  கதை வாழ்வில் மற்றவர்களிடம் வேலை பார்க்க முடியாது, சொந்த தொழில் செய்துதான் வாழ்வேன் என போராடும் இப்படத்தின் நாயகன் அரி ஷங்கர் (வெங்கடேசன்), நினைத்த படியே ஒரு சொந்த தொழில் ஆரம்பித்து உழைத்து வருகிறார். அதே ஊரில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அந்த பெண் இவரை வேண்டாம் என்று அவுமானம் செய்கிறது. பின்னர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் அந்த பெண்ணிற்கு இவர் அடைக்கலம் தருகிறார். இவர்களுக்குள் காதல் மலர்கிறது, வசந்தமாக மாறும் இவர்களின் வாழ்வில் தீடிரென ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. எதிர்பாராமல் பேருந்து விபத்து ஒன்றில் சிக்குகிறார் நாயகன். அதன் காரணமாக இவருக்கு இரு கைகளும் வெட்டப்படுகிறது. இதனால் அரசின் இழப்பீட்டுக்காக அரசு அலுவலகத்தை அணுகுகிறார். பின்னர் இவரை அலட்சிய படுத்தும் அரசு அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் செய்கிறார், பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
Read More

தோழர் வெங்கடேசன் நடிகர்கள் & படக்குழுவினர்

தோழர் வெங்கடேசன் அணியின் தகவல்

இயக்குனர் மகாசிவன்
ஒளிப்பதிவாளர் வேதா செல்வம்
தொகுப்பாளர் ராஜேஷ் கண்ணா , மகாசிவன்
இசை சகிஷ்னா சேவியர்
தயாரிப்பாளர் மாதவி அரிசங்கர்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தோழர் வெங்கடேசன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
இரண்டு கைகளையும் இழந்த அரிக்கு ஆதரவாக தோள் கொடுக்கிறார் மோனிகா. ஒரு வழக்கறிஞர் மூலம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்துக்கு செல்கிறார் அரி. சுமார் மூன்று ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ரூ.20 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடுகிறது கோர்ட். ஆனால் அதனை தர மனமில்லாத போக்குவரத்து கழகம் அரியை அலையவிடுகிறது. இறுதியில் இழப்பீட்டு பதிலாக ஒரு பேருந்தை ஜப்தி செய்ய ஆணையிடுகிறது கோர்ட். அந்த அரசுப் பேருந்தை வைத்துக்கொண்டு அரியும், மோனிகாவும் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்கிறது 'தோழர் வெங்கடேசன்'. தோழர் வெங்கடேசன் சொல்லும் கதை தமிழ் சினிமாவில் இதுவரை வராத புதிய கான்செப்ட். 'இழப்பீட்டுக்காக அரசு பேருந்து ஜப்தி' என நாம் கடந்துபோகும் ஒன்றைவரி செய்திக்கு பின், இத்தனை வலிகள் நிறைந்த வாழ்க்கை இருக்கிறதா? என புருவம் உயர்த்த வைக்கிறார் இயக்குனர் மகாசிவன். ஒரு சோகமான கதையை, காமெடியாக சொல்லிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர். முதல் படத்திலேயே வித்தியாசமான கதை களத்துடன் வந்து கவனம் ஈர்க்கிறார் அரிசங்கர். 'என்னா ஓய் நீ' என காஞ்சிபுரத்து ஸ்லாங்கில் பேசி, நடந்து கொண்டு அந்த ஊர் பையனாகவே மாறியிருக்கிறார். வாழ்க்கையை நினைத்து ஏங்கி அழுவது, பேருந்தை பாதுகாக்க போராடுவது என நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகன் அறிமுகமாகி இருக்கிறார்.

தோழர் வெங்கடேசன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Neha jhulka is so hot in the movie. Especially in the song abbo vadento. Gopichand fucked her so hard in that song. He pressed her boobs and stomach in that song and kissed her lips, hips and neck and stomach.

×
2.5 /5 Your Rating

தோழர் வெங்கடேசன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+