தும்பா இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் தர்சன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் நகைச்சுவை மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுரேகா நியபடி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் நரேன் எலன் மற்றும் படதொகுப்பாளர் ஆர். கலைவாணன் பணியாற்றியுள்ளனர்.
கதை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் டாப்சிலிப் என்ற சுற்றுலா இடங்களில் உள்ள விலங்கு சிலையிற்கு வர்ணம் பூச வருகிறார், தீணா மற்றும் அவரது நண்பன் தர்சன். காட்டு விலங்கு புகைப்படங்களில் ஆர்வம் கொண்ட காவ்யா இக்காட்டிற்கு புலியை புகைப்படம் எடுக்க வருகிறார்.
இவர்கள் வந்த நேரத்தில் டாப்சில்க் இடத்திற்கு அருகில் உள்ள கேரளா வனப்பகுதியில் இருந்து தும்பா என்ற புலி ஒன்று தப்பி டாப்சிலிப் காட்டிற்குள் வந்தடைகிறது. தப்பித்த அந்த புலியை சட்ட விரோதமாக பிடித்து விற்க முயல்கிறார்கள் வனத்துறையினர்.
வானதுரையரிடம் இருந்து அந்த புலியை காப்பாற்ற போராடுகிறார்கள், தீணா, தர்சன் மற்றும் காவ்யா. இதில் காட்டில் உள்ள அதிகாரிகளை எதிர்த்து புலியை காப்பாற்ற எவ்வாறு போராடுகிறார்கள் என்பதே படத்தின் கதை.