X
தும்பா

தும்பா

Adventure | Comedy | Fantasy | 21 Jun 2019 | U | 123 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

தும்பா கதை

தும்பா இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் தர்சன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் நகைச்சுவை மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.  இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுரேகா நியபடி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் நரேன் எலன் மற்றும் படதொகுப்பாளர் ஆர். கலைவாணன் பணியாற்றியுள்ளனர். கதை  மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் டாப்சிலிப் என்ற சுற்றுலா இடங்களில் உள்ள விலங்கு சிலையிற்கு வர்ணம் பூச வருகிறார், தீணா மற்றும் அவரது நண்பன் தர்சன். காட்டு விலங்கு புகைப்படங்களில் ஆர்வம் கொண்ட காவ்யா இக்காட்டிற்கு புலியை புகைப்படம் எடுக்க வருகிறார். இவர்கள் வந்த நேரத்தில் டாப்சில்க் இடத்திற்கு அருகில் உள்ள கேரளா வனப்பகுதியில் இருந்து தும்பா என்ற புலி ஒன்று தப்பி டாப்சிலிப் காட்டிற்குள் வந்தடைகிறது. தப்பித்த அந்த புலியை சட்ட விரோதமாக பிடித்து விற்க முயல்கிறார்கள் வனத்துறையினர்.  வானதுரையரிடம் இருந்து அந்த புலியை காப்பாற்ற போராடுகிறார்கள், தீணா, தர்சன் மற்றும் காவ்யா. இதில் காட்டில் உள்ள அதிகாரிகளை எதிர்த்து புலியை காப்பாற்ற எவ்வாறு போராடுகிறார்கள் என்பதே படத்தின் கதை.
Read More

தும்பா நடிகர்கள் & படக்குழுவினர்

தும்பா அணியின் தகவல்

இயக்குனர் ஹரிஷ் ராம்
கதை ஹரிஷ் ராம்
ஒளிப்பதிவாளர் நரேன் எலன்
தொகுப்பாளர் ஆர். கலைவாணன்
இசை அனிருத் ரவிச்சந்தர், விவேக் சிவா, மெர்வின் ஸோலோமன், சந்தோஷ் தயாநிதி
தயாரிப்பாளர் சுரேகா நியபடி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தும்பா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
இயற்கையின் சமநிலைக்கும், காடுகள் அழியாமல் இருப்பதற்கும் புலிகள் எவ்வளவு முக்கியம் என்பதை தும்பா மூலம் ஜாலியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹரீஷ் ராம். முழக்க முழக்க குழந்தைகளை மனதில் வைத்தே படத்தை உருவாக்கியிருக்கிறார். அதனால் காதல் கசமுசா எல்லாம் இல்லாமல், படம் கண்ணியமாக இருக்கிறது. படத்தில் வரும் வனவிலங்குகள் எல்லாமே கிராப்பிக்ஸ் தான். ஆனால் அதனை உயர்ந்த தரத்தில் நம்பும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் நெருடல் இல்லாமல் படத்தை பார்க்க முடிகிறது. கிராப்பிக்ஸ் அணில் மற்றும் 'டைகர்' குரங்கு செய்யும் சேட்டைகளை குழந்தைகள் நிச்சயம் ரசிப்பார்கள். பெண் புலியின் கிராப்பிக்ஸ் காட்சி தத்ரூபமாக இருப்பதால், சண்டைக்காட்சிகளும் அவ்வாறே உள்ளன. இருந்தாலும், சிங்கம் சூர்யா ரேஞ்சுக்கு 'தும்பா' சண்டை போடுவதெல்லாம் டூ டூ மச் ப்ரோ. குழந்தைகள் மட்டும் பார்தாங்கன்னா ஓகே.

தும்பா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தும்பா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+