அந்த இடத்தில் டாட்டூ…. ரசிகர்களுக்கு காட்டி மிரளவைத்த நடிகை !
சென்னை : தும்பா படத்தின் மூலம் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன் கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார்.
Recommended Video
முன்னாள் பிரபல நடிகர் அருண் பாண்டியனுடைய மகள் தான் கீர்த்தி பாண்டியன்.
அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை பெற்றார்.

அருண்பாண்டியன்
ஊமை விழிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்பாண்டியன். இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளர் , விநியோகஸ்தர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர் அன்பிற்கினியாள் படத்தில் ரீ எண்டரி கொடுத்தார்.

தும்பா
அருண்பாண்டியனுக்கு 3 மகள்கள். அவரது 2வது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் உருவான தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். காமெடி கலந்த ஒரு அட்வெஞ்சர் படம் என்பதால் குழந்தைகள் இப்படத்தை விருப்பி ரசித்தனர்.

அன்பிற்கினியாள்
அன்பிற்கினியாள் படத்தின் மூலம் அனைவரும் உற்று நோக்கும் நடிகையாக மாறிய கீர்த்திபாண்டியன். தனது அப்பா அருண்பாண்யனுடன் இணைந்து நடித்தார். அப்பாவும் மகளும் இணைந்து நடித்தது தான் அன்பிற்கினியாள் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்தது. மலையாளத்தில் ஹிட்டடித்த ஹெலன் படத்தின் ரீ மேக் தான் அன்பிற்கினியாள்.

நடுமுதுகில் டாட்டூ
கீர்த்திப்பாண்டியன் கறுப்பு நிறத்தில் மினுமினுக்கும் ஸ்லீவ்லஸ் உடையை போட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் உடை மினுமினுப்பது போல அவரின் முகமும் மினுமினுப்புடன் காணப்படுகிறது. மேலும், நடு முதுகில் சிங்கத்தின் முகத்தை பச்சை குத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டாட்டூ சூப்பரா இருக்கு என்று கருத்து கூறி வருகின்றனர்.

கேலி செய்தவர்களுக்கு பதிலடி
கீர்த்தி பாண்டியன் அண்மையில் கடற்கரையில் பிகினியில் இருக்கும் படத்தை பகிர்ந்து இணையத்தை திணறவைத்தார். மேலும், உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை அதிகரித்ததாக கீர்த்தி பாண்டியன் அந்த புகைப்படத்தில் பதிவிட்டு இருந்தார். எது எப்படியோ அம்மணியின் பிகினி படம் அனைவரையும் கவர்ந்தது என்பதுதான் உண்மை.

கண்ணகி ஃபர்ஸ்ட் லுக்
கீர்த்தி பாண்டியன் தற்போது கண்ணகி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சுதந்திர தினத்தன்று வெளியானது. இதில், கீர்த்தி பாண்டியன் தொப்புள் கொடியில் இருந்து ஒரு கயிறு வருவது போலும் கயிற்றின் மறுமுனையில் ஒரு நபர் தீ வைப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஒருசில ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











