துப்பாக்கி என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்தார்.
கதை:
இராணுவத்தில் வேலை செய்யும் ஜகதீஷ் (விஜய்) விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜயிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொள்கிறார் விஜய். சதித் திட்டங்களை முறியடிக்க தன்னுடன் பணியாற்றும் இராணுவ வீரர்களின் துணையுடன் அதனை முறியடிக்கிறார். கோபமடைந்த தீவிரவாதி தலைவன் விஜயையும், விஜய் தீவிரவாதி தலைவனையும் தேட, கடைசிக் காட்சியில் இருவரும் சந்திக்கின்றனர். விஜய் தீயவனை அழிக்கிறார்.