உச்சக்கட்டம் இயக்குனர் சுனீல் குமார் தேசாயி இயக்கத்தில் தன்ஷிகா, தாகூர் அனூப் சிங்க் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் தேவராஜ் ஆர் தயாரிக்க, இசையமைப்பாளர் சஞ்ஜோய் சௌதுரி இசையமைத்துள்ளார்.
கதை
ஒரு நட்சத்திர விடுதியில் நடக்கும் கொலையை தொடர்ந்து நடைபெறும் மர்மமான சம்பவங்கள் தான் உச்சக்கட்டம். காதலர்களான தாகூர் அனூப் சிங்கும், சாய் தன்ஷிகாவும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஒரு அறையில் ஒரு நபர் கொல்லப்படுகிறார். அதனை சாய் தன்ஷிகா யதர்ச்சையாக வீடியோ எடுத்துவிடுகிறார். இதையடுத்து சாய் தன்ஷிகாவை வில்லன் கும்பல் துரத்துகிறது.
ஒரு கார் டிக்கியில் ஒளிந்து கொண்டு, அவர்களிடம் இருந்து தப்பிச் செல்கிறார் அவர். வில்லன் கும்பலிடம் இருந்து தப்பிக்கும் தாகூர், தன்யோ ஹோப்பின் உதவியுடன் காதலியை தேடி செல்கிறார். இவர்கள் அனைவரும் குடகு மலை காட்டுப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். வில்லன் கும்பலிடம் தன்ஷிகா மாட்டிக்கொள்கிறார். தன்ஷிகாவை வில்லனிடம் இருந்து தாகூர் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை உச்சக்கட்ட விறுவிறுப்புடன் சொல்கிறது படம்.