வடகறி இது 2014ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை சரவண ராஜன் இயக்க, ஜெய், சுவாதி ரெட்டி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜூன் 19, 2014ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் குல்பி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
கதை
தனக்கு சொந்தமில்லாத பொருளை தன்வசப்படுத்திக் கொள்வதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்ற கருத்தைச் சொல்ல வந்திருக்கும் படமே ‘வடகறி’ ஆகும்.