வனம் இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, ஸ்ம்ருதி வெங்கட், அணு சித்ரா நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.
வனம் திரைப்படத்தின் கதை
நாயகன் வெற்றி ஒரு அரசு கல்லூரியில் படிக்க செல்கிறார், அந்த அரசு கல்லூரி அருகில் இருக்கும் ஒரு விடுதியில் தங்கி கல்லுரிக்கு சென்று வருகிறார். அவர் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள ஒரு அறையில் மட்டும் தொடர்ந்து மர்மமாக மரணங்கள் நிகழ்கிறது.
அந்த அறையில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என நாயகன் கண்டு பிடிக்க முயற்சிக்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.